என் மலர்
உலகம்
- அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கினார்.
- பிறந்த சிசு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் நேரில் பார்த்தார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆவணங்களின்படி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கியதாகவும், அதே சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் வன்கொடுமை செய்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 1984-ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில், பிறந்த குழந்தை சிசுக்ககொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட குழந்தை டிரம்ப் அல்லது பிறரின் பாலியல் உறவினால் உருவான குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் இந்த அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
- உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசியதை பெருமையாக கருதுகிறேன்.
வர்த்தகம் மற்றும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.
ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதன்மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.
கூடுதலாக, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் விருது
- மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். அவரது "Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும் கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.
- உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன.
- இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதைதொடர்ந்து அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்கு ஆசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்றும் அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும். ஈரானை தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரான் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்புகிறேன். ஆனால் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா இந்தப் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கும் ராணுவத்தை பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.
உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.
அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி "இது பிராந்தியப் போராக" மாறும் என்று சொன்னது சரியா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போதனைகளும், புனிதமான திபெத்திய மந்திரங்களும் இசையுடன் கோர்க்கப்பட்டுள்ளன.
- ஆபிரகாம் குனின் மற்றும் ஜூன்யெல் குனின் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளனர்.
2026-ம் ஆண்டுக்கான 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார்.
தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா' என்ற அவருடைய ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் தனது 'Inner World' என்ற இசை ஆல்பத்திற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். இந்த ஆல்பம் "Best New Age, Ambient, or Chant Album" என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு வெற்றி பெற்றது.
இதில் தலாய் லாமா அவர்களின் போதனைகளும், புனிதமான திபெத்திய மந்திரங்களும் இசையுடன் கோர்க்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களான ஆபிரகாம் குனின் மற்றும் ஜூன்யெல் குனின் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளனர்.
மன அழுத்தம் மற்றும் கவலை நிறைந்த உலகில், அமைதியையும் கருணையையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் தலாய் லாமா அவர்களின் சில உரையாடல்கள் மற்றும் ஆல்பங்கள் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அவர் நேரடியாகப் பங்குபெற்று கிராமி விருதை வெல்வது இதுவே முதல் முறை.
- அரசு வீட்டு திட்டத்திற்கு நில ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு.
- இரண்டு வழக்குகளில் தலா 5 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு வீட்டு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு வழக்கு நிலம் வழங்கியதில் முறைகேடு. மற்றொரு வழக்கு ரஜுக் புதிய நகரம் திட்டத்தின் கீழ் பிளாட் ஒதுக்கியதில் முறைகேடு ஆகும்.
அவரது மருமகள் (nieces) துலிப் ரிஸ்வானா சித்திக் என்பவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருமகன் (Nephew) ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளிலும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
- உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது.
- சீனா குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ (Yuan) உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சீனா கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தில் மேற்கொண்டது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தத்துவார்த்த இதழான கியுஷியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், "சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், 'யுவான்' நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும்" என்று ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 145 பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம்.
- கடுமையான வன்முறை சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இந்த சம்பவங்கள், அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வன்முறை சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பலோசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி, பேசும் போது, "கடந்த 40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம்" என்றார். இந்த வன்முறையில் 31 பொதுமக்களும், 17 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தென் ஆசிய பயங்கரவாத தகவல் மைய (South Asia Terrorism Portal) தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுக்க 3,967 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். இது 2015க்கு பிந்தைய காலக்கட்டத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள, கனிம வளங்கள் நிறைந்த பலோசிஸ்தான் மாகாணத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. அப்பகுதியில் செயல்படும் பலோச் தேசியவாத அமைப்புகள், தங்களது இயற்கை வளங்களில் அதிக பங்கு மற்றும் அரசியல் உரிமைகளை கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வார இறுதியில் மாகாணத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அவற்றை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் களமிறங்கின. இந்த தாக்குதல்களுக்கு "இந்திய ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்" காரணம் என பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா "அடிப்படையற்றது" என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
- ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது.
- போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்போம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தெஹ்ரான்:
ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரானில் உள்ள பிரபல துறைமுகமான பந்தர் அபாசில் ஈரான் நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. திடீரென அந்தத் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
- எப்ஸ்டீன் சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்படுகின்றன.
- அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கிலான பக்கம் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.
பிரடிஸ்லவா:
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவின் தனிச்செயலராகவும், அறிவுரை வழங்குபவராகவும் இருந்தவர் மிரோஸ்லவ் லஜக். 2009ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் லஜக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் பிரதமரின் தனிச் செயலர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
- கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்க பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன.
- நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ருபாயா எனும் இடத்தில் கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் பல பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்காலம் என்பதால் அங்குள்ள மண் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த நிலச்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கோ சுரங்க நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
- தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும்.
- ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது
இருநாடுகளுக்கிடையே நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் பிராந்தியப் போர் ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று அயதுல்லா கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், "நாங்கள் தூண்டுபவர்கள் அல்ல, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஈரான் தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும். சமீபத்திய கிளர்ச்சி ஒரு இராணுவப் புரட்சியைப் போன்றது. நிச்சயமாக, அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது." என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது கடற்படையை ஈரான் அருகே அனுப்பியுள்ள நிலையில் கமெனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒருபுறம் போர் பதற்றம் நிலவினாலும், மோதலைத் தவிர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் "சீரியஸாகப் பேசி வருகிறது" என்று டிரம்ப் கூறியுள்ளார். ரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை ஐரோப்பிய ஒன்றியம் 'பயங்கரவாத அமைப்பு' என அறிவித்ததற்குப் போட்டியாக, ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது.






