என் மலர்tooltip icon

    உலகம்

    • நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன்.
    • சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சோயாபீன்சை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. அமெரிக்காவை பொறுத்தவரை சீனாவின் சோயாபீன்சுகளை வாங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

    சீனா சோயாபீன்ஸ் ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டிரம்ப் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயாபீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து விவசாயிகளுக்கு உதவுவோம். நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன்.

    சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது.
    • பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில் பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    இதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியது. இதனால் அங்கு இணைய சேவையை பயன்படுத்தும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தலைநகர் காபூலில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள ஒளியியல் இழைகள் (ஆப்டிகல் பைபர் ஒயர்கள்) சேதப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
    • அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.

    அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.

    • ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
    • படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் டிரம்ப் வெளியிட்ட பதிவில், " கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.

    கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.

    இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்" என்று பதிவிட்டார்.

    டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது என்று கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், "அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

    • இந்த பணிநிறுத்தம் லட்சக்கணக்கான கூட்டாட்சி ஊழியர்களை ஊதியமின்றி தவிக்க வைத்துள்ளது.
    • சுமார் 7,50,000 ஊழியர்கள் விடுமுறையை எதிர்கொள்கின்றனர்.

    அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டது.

    அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    6 ஆண்டுகளில் முதல் முறையாக அரசு பணி நிறுத்தம் நிகழ்ந்ததைக் குறிக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியை வெள்ளை மாளிகை குற்றம்சாட்டி உள்ளது.

    இந்த பணிநிறுத்தம் லட்சக்கணக்கான கூட்டாட்சி ஊழியர்களை ஊதியமின்றி தவிக்க வைத்துள்ளது. சுமார் 7,50,000 ஊழியர்கள் விடுமுறையை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் எல்லை முகவர்கள் போன்ற அத்தியாவசிய ஊழியர்கள் நிதி மீண்டும் தொடங்கும் வரை ஊதியமின்றி வேலை செய்ய வேண்டும். 

    • நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
    • பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    • சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
    • குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

    இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

    பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.

    எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

    குமாரி தேர்வு செய்யப்படும் முறை

    2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

    இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

    குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.

    குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

    ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர். 

    • ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
    • பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் இரவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    போஹோல் மாகாணத்தில் முதல் நிலநடுக்கத்தின் மையம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 33,000 மக்கள் வசிக்கின்றனர். சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    இந்த சூழலில், லெய்ட், செபு மற்றும் பிலிரான் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உள்ளூர் நிலநடுக்க மையம் எச்சரித்துள்ளது.

     

    இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

    நிலநடுக்கத்தால் பன்டாயன் பகுதியில் ஒரு தேவாலயம் இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடதக்கது. 

    • குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
    • பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.

    குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.

    தகவல் அறிந்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

    குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர்.

    பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 

    • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
    • இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஒரு பகுதியில் கட்டிட விரிவாக்க பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் மாணவர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தபோது பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ராட்சத கான்கிரீட்கள் சரிந்தன. இதன் இடிபாடுகளில் ஏராளமான மாணவர்கள் சிக்கி கொண்டனர்.

    உடனே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். 99 மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலோர் ஆண்கள் ஆவார்கள். கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் 65 மாணவர்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். அவர்களை மீட்க போராடி வருகிறோம். உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.

    இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இதற்கிடையே கட்டிடத்தின் 3-ம் மாடியில் கட்டுமான ஊழியர்கள் சிமெண்ட் கலவையை ஊற்றிய பிறகு கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.

    இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.

    ×