என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன.
- வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது. குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை வனத்துறை போலீசார் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர். வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
- வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தானே:
தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.
மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.
இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
ரோம்:
மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, போப் பிரான்சிஸ் அமெரிக்க பாதிரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது. இது மோசமாக முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்பவர்களை பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் போப் ஆண்டவர், அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகள் இயக்கப்படும்.
- கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்ரவரி 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
பிப்ரவரி 15ஆம் தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
- விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
- இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார்.
விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார். இவர் வெற்றி மாறனின் துணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக இப்படம் உருவாகவுள்ளது.
படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ளவுள்ளார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிப்ரவரி 12-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழா 25-ம் ஆண்டு கொடிநாள்.
- அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் கொடிகள் ஏற்ற வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிப்ரவரி 12-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழா 25-ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 2000-ம் ஆண்டு நமக்காக மூவர்ண கொடியை நமது தலைவர் கேப்டன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின், அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடிநாளை தமிழக முழுவதும் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, சனாதனம், சமதர்மம், சமூகநீதி, சமசிந்தனையை பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு நமது தலைவர் அளித்தார்.
ஜாதி, மத, மொழி வேறுபடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தரமான மருத்துவம், வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகராமான கொள்கைகளையும் கொடி அறிமுகப்படுத்திய அன்றே நமக்கு உறுதிசெய்திருக்கிறார்.
அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றிப், புதுக்கொடிகளை ஏற்றி, கழக கொடிகள் இல்லாத இடத்தில் புதுக்கொடிகளை அமைத்து வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தேமுதிக கொடியை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்றிட வேண்டும்.
தலைவர் கேப்டனின் கோட்பாடு படி இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, அதிகமான உறுப்பினர்களை நமது கொடி நாளில் முகாம்கள் அமைத்து பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து, அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக நமது கழகத்தை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.
கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கழகக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட நாம் அனைவருமே உறுதிமொழி ஏற்போம் என தேமுதிக வெள்ளி விழா ஆண்டு கொடிநாளில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் பிரேமலதா விஜயாகாந்த் தெரிவித்துள்ளார்.
- ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன.
- ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான ஜெயா பச்சன், சினிமா துறை மீது கருணை காட்டுங்கள், சினிமா துறை பிழைக்க உதவி செய்ய வேண்டும் என நிதியமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:-
ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள். நீங்கள் முற்றிலும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையை புறக்கணித்துள்ளீர்கள். ஏனென்றால், அதை உங்களுடைய நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள்.
இன்று ஜிஎஸ்டி வரியை விட்டுவிடுங்கள். ஒரு திரைகொண்ட (Screen) தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. சினிமா ஹால்களுக்கு மக்கள் செல்லவில்லை. ஏனென்றால் அங்கு எல்லாமே அதிக விலையாக உள்ளது. ஒருவேளை இந்த துறையை நீங்கள் முற்றிலுமாக அழிக்க விரும்பலாம். இந்த ஒரு துறைதான் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவுடன் இணைக்கிறது.
நான் எனது திரைப்படத் துறையின் சார்பாகப் பேசுகிறேன், மேலும் ஆடியோ-விஷுவல் துறையின் சார்பாக இந்த அவையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தயவுசெய்து அவர்களைக் காப்பாற்றுங்கள். தயவுசெய்து அவர்களுக்காகக் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நீங்கள் இந்தத் துறையைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். இன்று நீங்கள் சினிமாவையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளீர்கள்.
இது மிகவும் கடினமான தொழில். இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக பரிசீலிக்கவும். நிதியமைச்சர் இதைப் பரிசீலித்து, இந்தத் தொழில் நிலைத்து நிற்க உதவும் ஏதாவது ஒன்றைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயா பச்சன் பேசினார்.
- பொதுமக்கள், பாதுகாப்புப் படை மீது பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி வருகிறது.
- கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள இடுரி மாகாணத்தின் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- "அகத்தியா" படத்தினை பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஒரு ஃபேண்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
- மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது. அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர்.
இதுதான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்" முக்கியமான பும்ரா: "15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன்.
அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் அரையிறுதி விளையாட வைக்க முடியும். மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை.
என்று கூறினார்.






