என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன.
    • ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான ஜெயா பச்சன், சினிமா துறை மீது கருணை காட்டுங்கள், சினிமா துறை பிழைக்க உதவி செய்ய வேண்டும் என நிதியமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:-

    ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள். நீங்கள் முற்றிலும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையை புறக்கணித்துள்ளீர்கள். ஏனென்றால், அதை உங்களுடைய நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள்.

    இன்று ஜிஎஸ்டி வரியை விட்டுவிடுங்கள். ஒரு திரைகொண்ட (Screen) தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. சினிமா ஹால்களுக்கு மக்கள் செல்லவில்லை. ஏனென்றால் அங்கு எல்லாமே அதிக விலையாக உள்ளது. ஒருவேளை இந்த துறையை நீங்கள் முற்றிலுமாக அழிக்க விரும்பலாம். இந்த ஒரு துறைதான் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவுடன் இணைக்கிறது.

    நான் எனது திரைப்படத் துறையின் சார்பாகப் பேசுகிறேன், மேலும் ஆடியோ-விஷுவல் துறையின் சார்பாக இந்த அவையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தயவுசெய்து அவர்களைக் காப்பாற்றுங்கள். தயவுசெய்து அவர்களுக்காகக் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நீங்கள் இந்தத் துறையைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். இன்று நீங்கள் சினிமாவையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளீர்கள்.

    இது மிகவும் கடினமான தொழில். இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக பரிசீலிக்கவும். நிதியமைச்சர் இதைப் பரிசீலித்து, இந்தத் தொழில் நிலைத்து நிற்க உதவும் ஏதாவது ஒன்றைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஜெயா பச்சன் பேசினார்.

    • பொதுமக்கள், பாதுகாப்புப் படை மீது பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி வருகிறது.
    • கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள இடுரி மாகாணத்தின் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.

    கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • "அகத்தியா" படத்தினை பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.

    கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.

    இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஒரு ஃபேண்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
    • மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது. அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர்.

    இதுதான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்" முக்கியமான பும்ரா: "15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன்.

    அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் அரையிறுதி விளையாட வைக்க முடியும். மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை.

    என்று கூறினார். 

    • ராணுவ வீரர்கள் ரோந்து சென்றபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது.
    • இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு குண்டு வெடித்தது.

    இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்ற தகவலை இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர் உறுதிசெய்தனர். எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடைபெற்ற 3-வது தாக்குதல் சம்பவம் ஆகும்.

    குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      2008 ஆம் ஆண்டு நீளன் இயக்கத்தில் வெளியான அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் கிருஷ்ணா. அதைத் தொடர்ந்து கற்றது களவு , கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கழுகு திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார் கிருஷ்ணா. 

      சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பாராசூட் வெப் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணா நடிக்கும் 25- வது படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

      இப்படத்தை அறிமுக இயக்குனரான பால கிருஷ்ணன் இயக்கவுள்ளார். மனு மந்த்ரா கிரேயஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

      உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

      • யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
      • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

      ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

      தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

      இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.

      திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான Awsum Kissa பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ஒரு டிரிப்பி வைபாக அமைந்துள்ளது. இப்பாடலை கெளுத்தி, கானா பிரான்சிஸ் வரிகளில் யுவன் மற்றும் ஆஃப்ரோ இணைந்து பாடியுள்ளனர்.

      ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

      உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


      • காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட கோரிக்கை.
      • கோரிக்கையை ஏற்று அரசு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டியுள்ளது.

      மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

      அவரது கோரிக்கையை ஏற்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப்பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

      இதில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோர் மற்றும் எஸ்.பி.பி. குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

      • சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
      • திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

      லக்னோ:

      உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

      மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

      கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளனர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

      இதற்கிடையே, சமாஜ்வாடியின் மாநிலங்களவை எம்பியான ராம் கோபால் யாதவ் கூறியதாவது:

      மோசமான ஏற்பாடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். உணவு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.

      அங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். இப்போது மக்கள் பசியால் இறக்கின்றனர்.

      பெட்ரோல், கார்களுக்கு டீசல் இல்லை. மக்களுக்கு உணவு இல்லை. தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உத்தர பிரதேச அரசு அலகாபாத்தை வாகனம் இல்லாத பகுதி ஆக்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என காட்டமாக விமர்சித்தார்.

      இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி.யான ஹேமமாலினி பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

      மகா கும்பமேளா ஒரு வெற்றி. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை. அனைவரும் நீராட விரும்புவதால் ஏராளமானோர் அங்கு செல்கின்றனர்.

      இது மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் அதைப் பாராட்டுகிறார்கள். அங்கு சென்ற எனக்கு தெரிந்தவர்கள், மிக நன்றாக நிர்வகிக்கிறார்கள் என்கிறார்கள். விபத்து நடந்தது, ஆனால் கும்பமேளா தோல்வி அடைந்தது என அர்த்தமல்ல என தெரிவித்தார்.

      • Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்க வேண்டிய நிதியில் ஒரு தவணை கூட விடுவிக்கப்படவில்லை.
      • தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது கைவிடவேண்டும்.

      தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

      தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

      இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

      ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை.

      போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

      தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்.

      இவ்வாறு அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

      • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
      • ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.

      ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.

      இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்பு ப்ராஜக்டிற்கான பின்னணி இசையை இன்று தொடங்கினேன். காட் பிளெஸ் யூ மற்றும் டயர் ஸ்டார்ட்ஸ் நவ்" என பதிவிட்டுள்ளார். இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை குறித்து தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

      அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

      உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

      • கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் டி20 அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தன.
      • இந்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் உள்ளன.

      கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்த, கொண்டிருக்கும் அந்த அணியால் இதுவரை ஐசிசி டிராபியை வெல்ல முடியவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது.

      இந்த நிலையில் இந்த வருடம் ஐசிசி டிராபி வறட்சியை தென்ஆப்பிரிக்கா முடிவுக்கு கொண்டு வரும் என தென்ஆப்பிரிக்காவின் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கிரோம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக கிரேம் ஸ்மித் கூறியதாவது:-

      2027 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே, ஐசிசி சாம்பியன் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூலமாக ஐசிசி டிராபிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2027 உலகக் கோப்பையை சொந்த மக்கள் முன் வென்றால், அது அற்புதமானதாக இருக்கும்.

      அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் மைதானங்கள், ஆடுகளங்கள் மற்றும் கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறோம். இதனால் 2027 உலகக் கோப்பையை நடத்தும் நேரத்தில், அதை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருப்போம்.

      இவ்வாறு கிரோம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

      8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. 2027 உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.

      கடந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், இந்த வருட தொடக்கத்தில் பெண்களுக்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

      ×