என் மலர்
நீங்கள் தேடியது "IED blast"
- ராணுவ வீரர்கள் ரோந்து சென்றபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது.
- இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்ற தகவலை இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர் உறுதிசெய்தனர். எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடைபெற்ற 3-வது தாக்குதல் சம்பவம் ஆகும்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarhattack
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chhattisgarhattack #IEDblast #jawanskilled






