என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது " வீர தீர சூரன் திரைப்படம் ஒரு Raw மிகவும் இண்டன்சாக இருக்கும். எல்லா கதாப்பாத்திரங்களும் சிறு வில்லத்தன்மை உடையவர்கள் தான். ஆனால் அவர்களுக்கென ஒரு நியாயம் இருக்கும். இயக்குனர் அருண் குமார் மிகப்பெரிய ஹாலிவுட் இயக்குனரான மார்டின் ஸ்கார்சி- உடைய ரசிகன். அதனால் இப்படமும் மார்டின் ஸ்கார்சி திரைப்படம் கிராமப்புற பின்னணியில் எடுத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்தப் படம் " என கூறியுள்ளார்.
- இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
- பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.
நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
- மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
- தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.
இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
- இளையராஜா சிம்பொனி இசைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் பிரதமர்.
- பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாதது என தெரிவித்தார் இளையராஜா.
புதுடெல்லி:
இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா இன்று சந்தித்தார். அவரிடம் சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.
இந்நிலையில், இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன் வாலியன்ட் என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசுகையில் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
- கேரள மாநில முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்" என்றார்.
- இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
- பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.
கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.
ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
- திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு 30 வயதுடைய ஒரு நபர் கொடைக்கானலில் தன்னை தானெ கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறார் இந்த காட்சி வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
- நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.
நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.
என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.
- கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாலாஜி ஜெயராமன் வரிகளில் அருன் ராஜ் பாடியுள்ளார்.
- கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
- 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.
- உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
- இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.
ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம்.
- இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார்.
பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் இரு குழந்தைகள் வெவ்வேறு குடும்பத்தில் தவறுதலாக மாறி விடுகிறது அதற்கு அடுத்து அந்த குழந்தையை எப்படி மீட்டனர் என்பதே படத்தின் கதைக்களமாகும். படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.






