இந்தாண்டு 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு

உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.
இந்தாண்டு 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு
Published on

ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.

இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com