பெருசு படத்தின் டைட்டில் டிராக் வெளியானது

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெருசு படத்தின் டைட்டில் டிராக் வெளியானது
Published on

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாலாஜி ஜெயராமன் வரிகளில் அருன் ராஜ் பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com