என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

    இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

    அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.

    பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.

    படத்தின் மூறாம் சிங்கிள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
    • ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

    பென்ஸ் திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.

    இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் கைதி 2 மற்றும் விக்ரம் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், பென்ஸ் படத்தில் நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று சம்யுக்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

    இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதுகின்றனர்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கியுள்ளது

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தது குறித்து சுகுமார், "'கும்கி' படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக 'கும்கி 2' படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள். யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் 'கும்கி 2' படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம்." என கூறியுள்ளார்

    'கும்கி2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

    இந்நிலையில் 'கும்கி 2' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    • குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத் ஆளுநராக உள்ளார்.
    • சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, மராட்டிய மாநிலத்துக்கு பொறுப்பு ஆளுநராக குஜராத் மாநில ஆளுநரை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத், கவர்னராக இருக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் 42 ரன்கள் அடித்தார்.
    • தொடக்க வீரர் ஜீஷன் அலி 30 ரன்கள் சேர்த்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹாங்காங் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடினர்.

    தொடக்க வீரர் அன்ஷி ராத் 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜீஷன் அலி 34 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாகத் கான், கேப்டன் யாசிம் முர்தாசா நிலைத்து நின்று விளையாடினர். இதனால் ஹாங்காங் 14.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    நிசாகத் கான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாசிம் முர்தசா 28 ரன்னில் வெளியேறினார். இறுதியாக ஹாங்காங் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

    • நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
    • தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.

    கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.

    இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.

    சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

    தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை SSB பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.

    • செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.

    துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. இந்நிலையில் லோகா படத்தின் வெற்றி காரணமாக மேலும் அப்படம் நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால் அதன் வெற்றியை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


    ×