என் மலர்
நீங்கள் தேடியது "நேபாளம் அரசு"
- நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
- தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை SSB பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.
நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க நேபாளம் மந்திரிசபை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது.
இந்த முடிவுக்கு உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். 5 முதல் 8 நாட்கள்வரை அங்கு தங்கியிருக்கும் அவர்கள் சராசரியாக 11 ஆயிரம் ரூபாய்வரை அங்கு செலவிடுகின்றனர்.

இந்நிலையில், நேபாள ராஷ்டிர வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் இருக்கும் வங்கிகள், நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Nepalbans #Indiannotes #Rs100






