என் மலர்
நீங்கள் தேடியது "Kollur Moogambigai"
- இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதிசங்கரர் காலத்திலேயே நடந்த அற்புத நிகழ்ச்சி ஒன்றை இதற்கான காரணமாக சொல்கிறார்கள்.
- ஆதிசங்கரரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய சாமுண்டீஸ்வரி அவரது அழைப்பை ஏற்றாள்.
கேரளாவில் சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் ரௌத்திர தேவதை அல்ல, காளியும் அல்ல.
சாந்த சொரூபிணி என்று கருதப்படுகிறாள்.
ஆதிசங்கரர் காலத்திலேயே நடந்த அற்புத நிகழ்ச்சி ஒன்றை இதற்கான காரணமாக சொல்கிறார்கள்.
அது என்ன கதை? பாரததேசம் முழுவதும் பாதயாத்திரை சென்ற ஆதி சங்கரர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்குப் போனார்.
அம்பாளின் அந்த ரூபத்தில் மனம் ஒன்றினார்.
'தாயே உன் சக்தி எங்கும் உள்ளது., எனினும் இந்த ரூபத்தில் நீ கேரளா பூமிக்கு வரவேண்டும்" என்று வேண்டினார்.
ஆதிசங்கரரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய சாமுண்டீஸ்வரி அவரது அழைப்பை ஏற்றாள்.
'மகனே ... நீ முன்னால் நட... நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன்.
ஆனால் நீ எக்காரணம் கொண்டும் பின்புறம் திரும்பிப் பார்க்ககூடாது.
தவறினால் நீ திரும்பிப்பார்த்த இடத்திலேயே நான் நின்று விடுவேன்.
அதுவே என் குடியிருப்பு" என்றாள்.
சங்கரர் மனம் மகிழ்ந்து அம்பிகையின் நிபந்தனையை ஏற்று நடந்தார். ஈஸ்வரி தொடர்ந்தாள்.
அம்பாள் நடக்கையில் அவளுடைய கை வளையல்கள் குலுங்கின.
கால்களில் அணிந்திருந்த சலங்கையின் ஒலி மெட்டியில் இருந்த முத்துக்களின் ஒலிகள் எழுந்தன.
அமைதியான காட்டு வழியில் அந்த ஒலிகள் இனிமையாக ஒலித்தன.
ஒலிகள் தானே சொற்களின் மொழியின் தாய்.
ஓரிடத்தில் ஒலிகள் நின்று விட்டன. நிசப்தம் அமைதி.
ஆதி பராசக்தியின் ஆபரண ஒலிகள் கேட்கவில்லையே?
அச்சத்துடன் ஆதிசங்கரர் மெல்ல திரும்பிப் பார்த்தார்.
"மகனே! நிபந்தனையை மீறி விட்டாய் இனி நான் இங்கேயே இருக்கிறேன்.
இதுவும் பரசுராமனின் பூமியே!" என்று அம்பாள் அங்கேயே நின்று விட்டாள்.
அந்த இடம் எது தெரியுமா? கோலமகரிஷி தவம் செய்த கொல்லூர்.
அங்கே அம்பாள் மூகாம்பிகையாக எழுந்தருளினாள்.
ஆதி சங்கரரும் சில காலம் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் வளரும் வரை தங்கியிருந்தார்.
அப்போது அம்பாள் ஆதி சங்கரருக்கு ஒரு வாக்களித்தார்.
"சங்கரா.. நான் மேலும் உன்னைத் தொடரவில்லை.
என்று வருந்தாதே நான் தினமும் உஷத் காலத்தில் சோட்டாணிக் கரையில் வித்யா ரூபிணியாக காட்சி தருகிறேன்" என்றார்.
அவ்விதமே காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள்.
இந்த நம்பிகையுடன் பூஜிக்கிறார்கள்.
ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு அட்சரப்பியாசம்(எழுத்து தொடக்கம்) விழா போல் நடக்கும்.
மூகாம்பிகை கோயிலில் தினசரி இரவு 9 மணிக்கு கஷாயதீர்த்தம் வினியோகித்த பிறகு நடைஅடைத்து விடுவார்கள்.
மறுநாள் அதிகாலை கோயில் 5 மணிக்குத் திறந்தாலும் பூஜை 5-30க்கு தான் ஆரம்பம்.
ஆனால் சோட்டாணிக்கரையில் அதிகாலை 3 மணிக்கு கோயில் திறந்து 4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள்.
அப்போது மூகாம்பிகை சோட்டாணிக்கரையில் சரஸ்வதியாக எழுந்தருள்வதாக நம்பிக்கை.
அதற்கேற்ப சோட்டாணிக்கரையில் பூஜைகள் நடைபெறுகிறது.
- நான்கு பகுதி மண்டபங்கள், தூண்கள், மேற்கூரை அனைத்தும் கருங்கல்லால் ஆனது.
- பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் ஆலயத்துக்கு சென்று பலமுறை இசை விருந்து அளித்துள்ளார்.
கொல்லூர் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தின் தரையும், மூலவர் சன்னதியின் சுற்றுச்சுவர் பிரகாரத்தின்
நான்கு பகுதி மண்டபங்கள், தூண்கள், மேற்கூரை அனைத்தும் கருங்கல்லால் ஆனது.
1150 ஆண்டுகளுக்கு முன்னால் சாலிவாகன சகாப்தத்தில் கட்டப்பட்டது.
இதன் கோபுரம், உள் அமைப்பு, கருவறை இவைகள்கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இதை கட்டியவர்கள் பெங்கி என்ற வம்சம் சார்ந்த சங்கண்ண சாமந்தரின் மருமகன் பேங்கண்ணா சாமந்தர் என்ற குறுநில மன்னன்.
கேரளத்தை ஆட்சிபுரிந்த பல்வேறு மன்னர்களும், திருவாங்கூர் கொச்சின், கோழிக்கோடு
சமஸ்தான மன்னர்களும், மூகாம்பிகா கோவிலுக்கு நிலமானியங்கள் தங்கம்,
வைரம் என காணிக்கையை சமர்பித்துள்ளார்கள்.
இந்திய விடுதலைக்கும் முன்பு கொச்சி சமஸ்தானத்திற்கு வடக்கே இருந்த பரவூர் என்ற
பகுதியின் ராஜா தம்புரானுக்கு மூகாம்பிகாவே குல தெய்வம்.
இவர் அடிக்கடி கொல்லூர் வந்து அம்பாளை தரிசித்து போவாராம்.
வயது முதிர்ந்த இவரால் வரமுடியாமல் போன போது, பரவூரிலேயே மூகாம்பிகாவுக்கு
கோவில் எழுப்பியதாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.
1. கேரளம் தந்த மாபெரும் ஓவியன் ராஜாரவிர்மா இங்கு சித்திரம் வரைந்துள்ளார்.
2. இசை மேதை செம்மங்குடி மற்றும் கதகளி பரத நாட்டிய கலைஞர்கள் என எண்ணற்ற கலைஞர்கள் இங்கே அரங்கேற்றம் செய்து உள்ளனர்.
3. பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் மூகாம்பிகை ஆலயத்துக்கு சென்று பலமுறை இசை விருந்து அளித்துள்ளார்.
- அவளிடம் உரிமையாடு உங்கள் உள்ளத்து குமுறல்களை கொட்டுங்கள்.
- நாலு வார்த்தை நல்ல விதமாக புகழ்ந்து பேசுங்கள்.
கொல்லூர் மூகாம்பிகையை நேரில் பார்த்து வழிபடும் அரிய வாய்ப்பு கிடைத்தால்,
அவளிடம் மனம் விட்டுப் பேசத் தயங்காதீர்கள்.
அவளிடம் உரிமையாடு உங்கள் உள்ளத்து குமுறல்களை கொட்டுங்கள்.
அப்படியே திரும்பி வந்து விடாதீர்கள்.
நாலு வார்த்தை நல்ல விதமாக புகழ்ந்து பேசுங்கள்.
மூகாம்பிகை மகிழ்ச்சி அடைவாள். அவள் மனம் குளிரும் போது நமக்கு வேண்டியதை எல்லாம், கேட்டதை எல்லாம் தருவாள்.
அம்மா... தாயே... ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.
உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம். அன்னையை வர்ணித்து படியுங்கள். நல்லதே நடக்கும்.
ஜெயந்தி, மங்களா, காளி, பத்ரகாளி, கபாலினி, துர்க்கா, சமா, சிவா, தாத்ரி, ஸ்வாகா, ஸ்வதா என்று பல்வேறு விதமான நாமதே யங்களைப் பெற்றவளே! உனக்கு என் நமஸ்காரம்.
மது என்னும் அசுரனையும், கைடபன் என்னும் அசுரனையும் நாசம் செய்தவளே! நான்முகனுக்கு அருள்புரிந்தவளே! உனக்கு என்னுடைய நமஸ்காரம்.
எனக்கு நல்ல வடிவினை அளிப்பாய்.
வெற்றியை அளிப்பாய், புகழைக் கொடுப்பாய்.
என் எதிரிகளை அழிப்பாய்! அப்படிப்பட்ட வல்லமை உடைய உனக்கு என் நமஸ்காரம்.
உலகத்தில் உள்ள அனைவராலும் வணங்கப்படக் கூடிய பாத கமலங்களை உடையவளே!
தேவர்களுக்கு அசுரர்களினால் ஏற்படும் பயத்தினை விரட்டியடித்து அவர்களுக்கு
வெற்றி என்னும் சவுபாக்கியத்தினை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்.
மகிசாசூரன் என்னும் அசுரனைக் கொன்று பூமியைக் காப்பாற்றுபவளே!
நான்முகனுக்கு நல்ல வரங்கள் பலவற்றை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்!
பக்த பீஜன் என்னும் அசுரனைக் கொன்ற தேவியே!
சண்டன் என்னும் அசுரனையம், முண்டன் என்னும் அசுரனையும் வதம் செய்தவளே!
எண்ண முடியாத அர்தான வடிவம் பெற்றவளே! எல்லாவிதமான எதிரிகளையும் நாசமாக்குபவளே!
பரப்ருஹ்ம ஸ்வரூபிணியாக விளங்கும் சண்டிகையே!
எப்போதும் எவர் உன்னைப் பக்தியுடன் வணங்குகின்றார்களோ அவர்களுக்கும்,
உன்னை எப்போதும் வணங்கும் எனக்கும் அழகைக் கொடுக்க வேண்டும்.
வெற்றியைத் தரவேண்டும். புகழைத் தரவேண்டும் என் எதிரிகளை அழிக்க வேண்டும்.
சண்டிகை தேவியே! வியாதியினை முற்றிலும் ஒழிப்பவளே!
பக்தியின் காரணமாக உன்னை வணங்குவோருக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும்.
வெற்றியைக் கொடுக்க வேண்டும்.
சண்டிகையே! யார் உன்னை எப்போதும் பக்தியுடன் அர்ச்சனை செய்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும்.
வெற்றியைக் கொடுக்க வேண்டும்.
தேவி, சகல விதமான பாக்கியங்களையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும்.
பேரின்பமாகிய பரம சுகத்தினையும் அளிக்க வேண்டும்.
எதிரிகளுக்கு நாசத்தைக் தர வேண்டும். பிரமாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.
தேவி, மங்களமான விஷயங்களை அருள வேண்டும். பிரம்மாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.
கல்வியில் சிறந்தவனாகவும், புகழ் பெற்றவனாகவும், நிறைந்த செல்வம் உடையவனாகவும் என்னை மாற்றி அருள வேண்டும்.
மிகவும் பிரபலமான அசுரர்களுடைய கர்வத்தினை அழித்தவளே! சண்டிகையே, உன்னை நமஸ்கரிக்கும் எனக்கு நல்ல குணத்தினைத் தருவாய், மகிழ்ச்சியைக் கொடுப்பாய்.
- அளவில் பெரிதாக அமைந்த இடப்பாகமே சக்தி பாகம் என்று போற்றப்படுகிறது. சிறிதான வலப்பாகமே சிவபாகமாகும்.
- அந்த ஜோதிர்லிங்கத்தை அதனுள் ஓடும் சொர்ண ரேகை இரு பாகங்களாகப் பிரிகின்றன.
மூகன் எனும் கம்ஹாசூரன் ஆதிசக்தியினால் அழிந்த போது தன் ஆணவத்திற்கு வருந்தி மன்னிப்பு கோரினான்.
மேலும் அம்பாள் பெயருடன் தன் பெயரும் இணைந்து வழங்க அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான்.
அவனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள்
அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள்.
அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.
அதன்பின் அன்னையானவள் தனது அனைத்து சக்திகளையும் அங்கே கோலமகரிஷி கண்டெடுத்து
வணங்கி வந்த அந்த அற்புத ஜோதிர்லிங்கத்தை மகா வரப்பிரசாத பீடமாக்கிக் கொண்டு அருள்புரிந்து வரலானாள்.
அன்று அகிலாண்டீஸ்வரி தன் உச்சித சக்தியுடன் கலந்து விட்ட ஜோதிர் லிங்கம்தான் யுக யுகாந்திரங்களைக்
கடந்து இன்று வீரிய தீட்சண்யத்துடன் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை சன்னதியில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த ஜோதிர்லிங்கத்தை அதனுள் ஓடும் சொர்ண ரேகை இரு பாகங்களாகப் பிரிகின்றன.
அளவில் பெரிதாக அமைந்த இடப்பாகமே சக்தி பாகம் என்று போற்றப்படுகிறது.
சிறிதான வலப்பாகமே சிவபாகமாகும்.
இதனால் கொல்லூர் மூகாம்பிகை தலம் சக்தியும், சிவனும் ஒன்றாக சேர்ந்து தரிசனம் தரும் அர்த்தநாரி பீடமாகக் கருதப்படுகிறது.
இது தனி சக்தி பீடங்களில் சிறப்பானது.
ஏனெனில் மற்ற சக்தி பீடங்களில் தேவி மட்டுமே அருளாட்சி புரிகிறாள்.
இங்கு இறைவனும் இறைவியும் அருளாட்சி தருகிறார்கள்.
- பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!
- தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!
நான்கு கைகளைப் பெற்றவளே! நான் முகனால் துதி செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!
தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!
பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!
தேவர்களும், அரக்கர்களும் தங்கள் மணி முடியில் உள்ள ரத்னங்கள் கீழே புரளும் வண்ணம்
தொட்டு வணங்கத்தக்க திருப் பாத கமலங்களை உடையவளே! அம்பிகையே!
இந்திராணியின் கணவனான இந்திரனால் உள்ளன்புடன் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!
தேவி, கொடிய புஜ பல பராக்ரமம் மிகுந்த அசுரர்களுடைய கர்வத்தினை நாசம் செய்தவளே!
தேவி, எவ்வித உறவுகளும் அற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான மோட்ச சாம்ராஜ்யத்தை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவளே! அம்பிகையே!
மனத்திற்கு இனிமையைத் தரக் கூடியவளாகவும்
மனத்தின் போக்கினை அறிந்து நடப்பவளாகவும்
கடக்க முடியாத சம்சார சாகரத்தினைக் கடப்பதற்கு உதவி புரிபவளாகவும்
நல்ல குலத்தில் உதித்தவளாயும் உள்ள மனைவியை அளிக்க வேண்டும்.
மூகாம்பிகையை வழிபடும் போது இதை படித்த பிறகே மகா ஸ்தோத்திரமான தேவி மகாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
இதைப் படிப்பதன் மூலம் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.






