என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக...
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில்...

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக மக்களின் நெஞ்சங்களில்

    பொன்மனச் செம்மலாக,

    ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். 



    • சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
    • ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகள், தலைக்குந்தா மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காணப்பட்டது.

    அதிகாலை முதலே அடர்த்தியான பனி மூட்டம் சூழ்ந்ததால், வீடுகள், தோட்டங்கள், புல்வெளிகள் அனைத்தும் வெள்ளைத் திரை போர்த்தியது போல் காட்சியளித்தன.

    தலைக்குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், வாகனங்கள் மற்றும் கூரைகளின் மேல் உறைபனி படர்ந்து அந்த பகுதியே வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.

    கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் கடும் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

    பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

    • ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.

    பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

    மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.

    இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நேற்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 310 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360

    12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    13-1-2026- ஒரு கிராம் ரூ.292

    12-1-2026- ஒரு கிராம் ரூ.287

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல...
    • நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல...

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல..

    என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக ..

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..

    இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..

    நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..

    மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.

    நட்புக்கு தோழ் கொடுப்போம்.

    உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
    • காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் த.வெ.க. என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி தலைமையில் ஜனநாயகன் பொங்கல் விழா கொண்டாடி தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தால் கூடுதல் சீட் கேட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சென்னையில் 19-ந்தேதி காங்கிரஸ் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இன்று எடுக்கப்படும் முடிவு செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

    செயற்குழுவிற்கு பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மறுநாள் காங்கிரஸ் வெளியிடுகிறது. 2029 பாராளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்து கூட்டணி முடிவை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    • தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
    • ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.

    சென்னை:

    வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் தங்களுடைய தொகையை 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.

    இதற்கான பணிகளை தொழிலாளர் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயன் அடைவார்கள். தற்போது வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பணத்தை பெற ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அந்த நடைமுறை தேவையற்றதாக ஆகிறது.

    புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, 'யு.பி.ஐ.' 'பின்' பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இந்த பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.

    இந்த திட்டத்தை சீராக செயல்படுத்த, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தங்களது மென்பொருள் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து வருகிறது.

    தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. இந்த நடைமுறை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு கூடுதல் நிர்வாக சுமையை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கவே, நேரடி பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த புதிய மாற்றம், வருங்கால உறுப்பினர்களின் வாழ்க்கை எளிமையாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு இணையான சேவைகளை வழங்கும் அமைப்பாக வருங்கால வைப்பு நிதியை மேம்படுத்துவதற்கான முக்கிய பணியாக இந்த 'யு.பி.ஐ.' மூலம் நேரடி பணம் பெறும் திட்டமாகும் என்றார். 

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கரூர், கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தபோதும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடரும் என்றும் ரேஷன்கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,

    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

    என்றும் எங்கள் வாத்தியார் MGR

    அவர்களின் பிறந்தநாள்!

    தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க,

    அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்,

    திரை ஆளுமையாக தத்துவங்களையும்,

    முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும்

    அள்ளித் தந்த பொன்மனச் செம்மல்,

    இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,

    புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    வாழ்க புரட்சித்தலைவர் நாமம்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறப்பட்டுள்ளது. 



    • மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
    • சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

    அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இன்று காலை 10 மணி அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம்காணும் காளைகள், மாடுபிடி வீரர்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    ×