என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY: நேற்று குறைந்து இன்று அதிகரித்த தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம்
- நேற்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.
- தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 310 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320
14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360
12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-1-2026- ஒரு கிராம் ரூ.306
15-1-2026- ஒரு கிராம் ரூ.310
14-1-2026- ஒரு கிராம் ரூ.307
13-1-2026- ஒரு கிராம் ரூ.292
12-1-2026- ஒரு கிராம் ரூ.287






