என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.
    • இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்க உள்ள நிலையில் அந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன என்பதை பார்க்கலாம்.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்த தொடரில் முதல் 4 டெஸ்டுகளிலும் பேட்ஸ்மேன்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுவரை 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதி டெஸ்ட் நடக்கும் ஓவலில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் 2014-ம் ஆண்டில் இருந்து (கடைசி 11 டெஸ்ட்) இங்கு நடந்துள்ள அனைத்து டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது.

    இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இங்கு இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இதில் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.

    1971-ம் ஆண்டு அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் 2-வது இன்னிங்சில் பக்வத் சந்திரசேகரின் சுழல் ஜாலத்தை (6 விக்கெட்) சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 101 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்டில் கிடைத்த முதல் வெற்றி இது தான். அந்த வகையில் ஓவல் மைதானம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இந்த மைதானத்தில் மற்றொரு வெற்றி 2021-ம் ஆண்டில் கிட்டியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

    2007-ம் ஆண்டில் 664 ரன்கள் எடுத்தது இங்கு இந்தியாவின் அதிகபட்சமாகும். 2014-ம் ஆண்டில் 94 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். இந்திய தரப்பில் 10 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்ததும் அடங்கும்.

    இங்கிலாந்து அணி இங்கு 106 டெஸ்டுகளில் விளையாடி 45-ல் வெற்றியும், 24-ல் தோல்வியும், 37-ல் டிராவும் சந்தித்துள்ளது. 1938-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 903 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தத்தில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1896-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 44 ரன்னில் முடங்கியது மோசமான ஸ்கோராகும்.

    இங்கிலாந்தின் லியோனர்ட் ஹட்டன் (364 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1938-ம் ஆண்டு), தென் ஆப்பிரிக்காவின் அம்லா (311 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு) முச்சதம் விளாசியுள்ளனர். விக்கெட் வேட்டையில் இங்கிலாந்தின் இயான் போத்தம் (52 விக்கெட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (50 விக்கெட்) டாப்-2 இடங்களில் உள்ளனர்.

    • டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.
    • பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா (804 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (798 புள்ளி) 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (706 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார்.

    டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (இ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

    லீட்ஸ்:

    2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.

    இந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை யூசப் பதான் சிக்சர் விளாசி முடித்து வைத்தார். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஓய்வு அறையில் இருந்த ஷிகர் தவான் நடனமாடி கொண்டாடினார். மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் யூசப் பதான் வெளியில் இருந்து போட்டியை ரசித்த சிறுவர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
    • புள்ளிப்பட்டியலில் 4 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்தது.

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

    அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

    • 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும்.
    • 4ஆவது போட்டியை போன்று பேட்டிங் செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். இதனால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீரை அறிவுறுத்துகிறேன். இது போன்று பேட்டிங் (4ஆவது போட்டி) செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இது இளம் வீரர்களை கொண்ட அணி. அணி கட்டமைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் 4ஆவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்க்கும்போது, லார்ட்ஸ் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கவலைப்படும்.

    மான்செஸ்டர் டெஸ்டிடில் 5ஆவது நாள் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தது, லார்ட்ஸ் மைதானத்தில் 190 இலக்கை எட்டியிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் பல டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு நல்லது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட இருந்த நிலையில், காயத்தால் விலகினார்.
    • ஓவல் மைதானத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு இருந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தால் வாய்ப்பு எட்டவில்லை. இதனால் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றார்.

    தற்போது காயம் குணமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5ஆவது போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதனால் 5ஆவது போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டார். இதனால் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே ஆகாஷ் தீப் 4ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவரும் 5ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் களம் இறங்கினால் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    • லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
    • ஆடுகளத்தை பார்வையிட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    5ஆவது மற்றும் கடைசி போட்டி வருகிற 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் இன்று காலை ஓவல் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பார்வைிட்டதாக தெரிகிறது. அப்போது ஆடுகளம் பாராமரிப்பாளர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புகார் அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது கம்பீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆடுகளம் பராமரிப்பாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் யாரிடமும் சென்று புகார் அளியுங்கள். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் நீங்கள் சொல்ல முடியாது என கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    • ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
    • வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா?

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் சுந்தர் (101 நாட்அவுட்), ஜடேஜா (107 நாட்அவுட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் இந்தியா டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. தொடரை இழக்கவில்லை. கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும்.

    இந்த நிலையில் எனது மகன் சிறப்பாக விளையாடிய போதிலும், தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாஷிங்டன் சுந்தரின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் தந்தை கூறியதாவது:-

    வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். எனினும், மக்கள் அவரை தவிர்க்கவும், அவருடைய ஆட்டத்திறனையும் தவிர்க்க முனைகிறார்கள். மற்ற வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார்கள். எனது மகனுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. மான்செஸ்டர் டெஸ்ட் 2ஆவது இன்னிங்சில் 5ஆவது வீரராக களம் இறங்கியது போல் தொடர்ந்து அதே இடத்தில் களம் இறக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் 10 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு என் மகன் தேர்வு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.

    ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இது நியாயமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகமாக டர்ன் ஆகக்கூடிய ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் அடித்தார். அகமதாபாத் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் அடித்தார். அந்த இரண்டையும் சதமாக மாற்றியிருந்தாலும் நீக்கப்பட்டிப்பார்.

    வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராக மாறிவிட்டார், அதன் விளைவாகத்தான் இப்போது மக்கள் இந்த செயல்திறனைப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 25 வயதாகும் அவர் 12 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தங்களது சொந்த மண்ணில் முதலில் விளையாடிய 3 டெஸ்ட், அடுத்து விளையாடிய 5 டி20 என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

    • 4-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
    • ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    மான்செஸ்டர்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.

    இருப்பினும் அவரால் இங்கிலாந்துக்கு 5-வது போட்டியில் விளையாட முடியாது. அதன் காரணமாக அந்த போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு கிடைத்த அன்பையும், வாழ்த்துகளையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு உண்மையான பலத்தை அளித்துள்ளது. தற்போது எனது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்காக ஓய்வில் இருக்கிறேன்.

    என்னுடைய காயம் குணமடைந்து வருகிறது. இருந்தாலும் பொறுமையுடன் இருந்து முழு உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன். நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் என் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணமாகும். மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.

    என்று பதிவிட்டுள்ளார்.

    • இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4-வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே தொடருகின்றனர்.

    இங்கிலாந்து அணி விவரம்:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

    ×