என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
- இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சைத் தொடங்கியது.
இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர். இதன் மூலம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷிகர் தவான் கூறியதாவது:-
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதேபோல் கேப்டன் சுப்மன் கில்லும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
- போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது. அப்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். ரவீந்திர ஜடேஜா 90 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடனும் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என அழைத்தார்.
அப்போது 14 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு அணியாலும் வெற்றி பெற முடியாது என்பதால், ஸ்டோக்ஸ் அந்த முடிவை எடுத்தார். அதே சமயம், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதை சதமாக மாற்ற நினைத்தனர். அதனால், பென் ஸ்டோக்ஸ் விடுத்த அழைப்பிற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுக்குக் கை குலுக்க மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஒருவர் 90 ரன்கள் எடுத்திருக்கும்போதும், மற்றொருவர் 85 ரன்கள் எடுத்திருக்கும்போதும் போட்டியை முடிக்கலாமா? அவர்கள் சதம் அடிக்கத் தகுதி இல்லாதவர்களா? என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து வீரர்களும் 90 ரன்கள் மற்றும் 85 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும்போது போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா? ஒருவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருக்கும்போது அதை நாம் அனுமதிக்க வேண்டாமா? இங்கிலாந்து அணி இப்படித்தான் விளையாடும் என்றால் அது அவர்கள் விருப்பம். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
என்று கவுதம் கம்பீர் கூறினார்.
- இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள்.
- ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் டிராஃபோர்டில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி டிரா நோக்கி சென்று கொண்டிருந்தது. போட்டி முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது ஜடேஜா 89 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களிலும் இருந்தனர்.
அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியை முடித்துக் கொள்ளலாம் எனக்கூறி ஜடேஜா உடன் கைக்குலுக்க விரும்பினார். ஆனால் ஜடேஜா மறுத்துவிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் அடித்த பின்னர், போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். முன்னணி வீரர்கள் காயம் அடைய வாய்ப்புள்ளதால், இந்த முடிவை எடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் முடிவால் விரக்தியடைந்தனர். இந்த நிலையில் டிரா விவகாரத்தில் இங்கிலாந்தின் செயலை இரட்டை நிலை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
இரட்டை நிலை என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர். திடீரென அவர்கள் இருவரும் சதத்தை நெருங்கும்போது, நீங்கள் போட்டியை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அவர்கள் ஏன் அதை செய்ய வேண்டும்?.
இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை காலையில் இருந்து எதிர்ககொண்டு, போட்டியை டிராவுக்கு எடுத்துச் சென்றனர். இருவரும் கடினமாக விளையாடியிருக்கிறார்கள். அப்படி விளையாடியவர்களை, சதம் அடிக்காமல் போகச் சொல்கிறீர்களா?.
நான் கேப்டனாக இருந்திருந்தால், 15 ஓவர் முழுமையாக விளையாட சொல்லியிருப்பேன். பென் ஸ்டோக்ஸ், ஜடேஜாவிடம் பார்ட்-டைம் பந்து வீச்சாளரான ஹார் ப்ரூக்கிற்கு எதிராக சேதம் அடிக்கப் போகிறீர்களா? என கிண்டலாக சொல்லியுள்ளார்.
அவர்கள் சதம் அடிக்க வேண்டும். நீங்கள் ஸ்டீவ் ஹார்மிசன், பிளின்டாப் உள்பட எந்த பந்து வீச்சாளரையும் கொண்டு வாருங்கள். அவர்கள் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஹாரி ப்ரூக்கை அழைத்தது நீங்கள். அவர்கள் அல்ல.
இவை டெஸ்ட் ரன்கள், ஒரு சதம் கணக்கில் சேர்கிறது. பரிசாக அல்ல, வாஷிங்டன் அதற்கு தகுதியானவர், ஜடேஜா அதற்கு தகுதியானவர்.
இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று நீங்கள் உங்கள் பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. சரி. இரண்டாவது நீங்கள் விரக்தியடைந்தீர்கள், 'நான் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது'. இப்போது கிரிக்கெட் இப்படித்தான் செயல்படுகிறது.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
- கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரை 2-2 என சமன் செய்ய வெற்றி பெற வேண்டும் என்று சக வீரர்களுக்கு ரிஷப் பந்த் ஆலோனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட இலக்கைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, எங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய அல்லது அணியை முன்னோக்கி நகர்த்த என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் எனக்கு ஆதரவளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. மேலும் எங்கள் அணி அழுத்தத்தில் இருந்தது. ஆனால் முழு நாடும் ஒரே காரணத்திற்காக உங்கள் பின்னால் நிற்கும்போது, அதற்காக நீங்கள் உங்களின் முழு முயற்சியையும் வழங்க வேண்டும்.
என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்ற உணர்ச்சியை விளக்குவது மிகவும் கடினம். என் அணிக்கு நான் சொல்லப்போகும் ஒரே செய்தி, வெற்றி பெறுவோம் நண்பர்களே. நாட்டுக்காக இதைச் செய்வோம்.
என்று கூறியுள்ளார்.
- ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர்.
- கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கையை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் கில், "4வது டெஸ்டில் எங்கள் வீரர்களின் பேட்டிங்கை நினைத்துப் பெருமை அடைகிறேன். களத்தில் எவ்வளவு நேரம் நீடித்து ஆட முடியுமோ அவ்வளவு நேரம் ஆடிவிட வேண்டும் என நினைத்தோம். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஆட்டம் சதத்திற்கு தகுதியானது என நினைத்தோம். எனவே ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்க ஒப்புக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
- போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார்.
- ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.
இந்நிலையில், டிரா செய்ய கேட்டது குறித்து பேசிய கேப்டன் ஸ்டோக்ஸ், "ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அற்புதமாக விளையாடியதால், இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்துவிட்டது. டிரா மட்டுமே ஒரே முடிவு எனும் நிலையை கொண்டு வந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் நாங்களும் சோர்வடைந்து விட்டோம். எனவே கடைசி அரைமணி நேரத்தில் பவுலர்களை பந்துவீச வைத்து நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், போட்டி முடிந்ததும் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இதனால் நடுவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இறுதியாக ஜடேஜாவுடன் வேறுவழியின்றி ஸ்டோக்ஸ் கைகுலுக்கினார். ஆனால் அப்போது அவர் ஜடேஜாவின் முகத்தை கூட பார்க்கவில்லை.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது.
குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, "பஹல்காம் போன்ற பயங்கரவாதம் நடக்கக் கூடாது. அவை நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் விளையாட்டு விளையாடப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
- இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இப்போட்டியில் 2 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
- காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்தார்.
மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.
ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார் .
இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
- ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து கேப்டனுக்கு வழங்கப்பட்டது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் , பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினர்.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடியது. கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
இதற்கிடையே, 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், நடப்பு தொடரில் சுப்மன் அடித்த 4-வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் மாபெரும் சாதனை பட்டியலில் சர் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் 3-வது வீரராக சுப்மன் கில் இணைந்துள்ளார். மூவரும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர்.
- முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
செயின்ட் கிட்ஸ்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது. ஷெர்பேன் ரூதர்போர்டு 31 ரன்னும், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 28 ரன்னும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜம்பா 3, ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், சீன் அபோட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஜோஷ் இல்லிங்ஸ் 30 பந்தில் 51 ரன்னும், மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேமரூன் கிரீன் 55 ரன்கள் எடுத்தார். 18 பந்தில் 47 ரன் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
- இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது.
- சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினர்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.
5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசி களைத்துப் போயினர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.
இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.






