என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி
- முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
செயின்ட் கிட்ஸ்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது. ஷெர்பேன் ரூதர்போர்டு 31 ரன்னும், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 28 ரன்னும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜம்பா 3, ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், சீன் அபோட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஜோஷ் இல்லிங்ஸ் 30 பந்தில் 51 ரன்னும், மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேமரூன் கிரீன் 55 ரன்கள் எடுத்தார். 18 பந்தில் 47 ரன் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.






