என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அகா தலைமையில் ஃபகர் சமான், ஷாஹீன் அஃப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    • கோரக்பூர் லயன்ஸ் அணி யாஷ் தயாளை ரூ.7 லட்சத்துக்கு வாங்கியது.
    • உ.பி. 20 ஓவர் லீக் போட்டி இன்று தொடங்கி செப் டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

    ராயல்' சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். உத்தரப் பிரதே சத்தை சேர்ந்த இவர் மீது சமீப காலமாக பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்பு றுத்தியதாக புகார் அளித் தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரைச் சேர்ந்தபெண் ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் அளித்தார். 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரி வித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி யாஷ் தயாள் தாக்கல் செய்த மனுவை ஜெய்ப்பூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

    இந்த நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் 20 லீக் தொடரில் விளையாட யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தொடருக்கான ஏலத்தில் அவரை கோரக்பூர் லயன்ஸ் அணி ரூ.7 லட்சத்துக்கு வாங்கியது. வழக்குகள் முடியும் வரை யாஷ் தயாளை அணியில் சேர்க்க வேண்டாம் என்று கோரக்பூர் அணிக்கு உ.பி. கிரிக்கெட் சங்கம் உத்தர விட்டுள்ளது.

    பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், ஐ.பி.எல். வீரர் யாஷ் தயாளின் கிரிக் கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. உ.பி. 20 ஓவர் லீக் போட்டி இன்று தொடங்கி செப் டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

    • டிவால்ட் பிரெவிஸ் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசியுள்ளார்.
    • இந்த தொடரில் டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்ஸ், 13 பவுண்டரி உள்பட 180 ரன் குவித்தார்.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்களை விளாசினார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்களை விளாசினார்.

    இந்நிலையில், இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

    இந்தப் போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக விராட் கோலியின் சாதனையை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார்.

    விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசி முறியடித்துள்ளார்.

    மேலும், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 180 ரன்களை குவித்துள்ளார்.

    • மோசமான காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட், கிறிஸ் வோக்ஸ் இதுபோன்ற நிலையை சந்தித்தனர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். பந்து வீச முடியும். "Impact Player" என்ற முறை கிடையாது. தலையில் அடிபட்டு மூளை அழற்சி (concussion) ஏற்பட்டால் மட்டுமே, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம்.

    மற்றபடி காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்க முடியாது. இந்தியா- இங்கிலாந்து தொடரின்போது 4ஆவது போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டிற்கு காலில் பந்து பலமாக தாக்கியதில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் கடைசி டெஸ்டில் இருந்து விலகினார்.

    அதேபோன்று கடைசி போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டை இறங்கியது (dislocation). இதனால் அவர் பந்து வீசவில்லை. மேலும், பேட்டிங் செய்ய முடியாத நிலையில் ஒற்றைக்கையுடன் களம் இறங்கினார்.

    இதுபோன்று விளையாட முடியாத வகையில் தீவிர காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறக்கப்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதை சில கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்த்தனர். சில ஆதரித்தனர். இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேலிக்கூத்தானது எனச் சாடியிருந்தார்.

    இந்த நிலையில் உள்ளூர் போட்டிகளில் தீவிர காயத்தால் ஒரு வீரரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்படலாம் என்ற விதியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    • குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்டு ப்ரீவிஸ்-ஐ 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது.
    • அதிக தொகை கொடுத்திருக்கலாம் என்ற வகையில் அஸ்வின் பேசியிருந்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.

    சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.

    மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.

    • தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்க வாய்ப்பு.
    • அக்சர் படேல் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்படலாம்.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வருகிற 19ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்குள் கிரிக்கெட் விமர்சகர்கள் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப், யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ, அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படலாம்.

    சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்திலம், திலக் குமார் அடுத்தும் களம் இறக்கப்படலாம். அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இடையே கடும் போட்டி நிலவும். ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு குறைவுதான். முகமது சிராஜ், ஜித்தேஷ் சர்மா ஆகியோரையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    • கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
    • முதல் பந்தில் இரண்டு ரன் அடித்து, அதன்பின் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் மேக்ஸ்வெல்.

    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டெவால்டு ப்ரீவீஸ் 26 பந்தில் 53 ரன்களும், வான் டெர் டசன் 26 பந்தில் 38 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 172 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடகக் வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 54 ரன்கள் விளாசி, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

    அதன்பின் மளமளவென விக்கெட் சரிந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்த்தை வெளிப்படுத்தியது. இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது.

    லுங்கி நிகிடி பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்தார் 2ஆவது பந்தில் பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி 4 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்து. 3ஆவது மற்றும் 4ஆவது பந்தில் ரன்அடிக்கவில்லை. ஆனால் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    மேக்ஸ்வெல் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • 2006 பாகிஸ்தான் தொடரின்போது ஒரே விமானத்தில் பயணம் செய்தோம்.
    • அப்போது அப்ரிடி என்னைப் பற்றி வெறுக்கத்தக்கும் வகையில் பேசினார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் களத்திற்குள் பயங்கரமாக மோதிக் கொள்வார்கள். அதிக அளவில் ஸ்லெட்ஜிங் நடைபெறும். இந்த ஸ்லெட்ஜிங் களத்திற்கும் வெளியிலும் சிலநேரம் நடைபெறும்.

    கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது அப்ரிடிக்கும், தனக்கும் இடையில் ஸ்லெட்ஜிங் நடந்ததை இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-

    2006ஆம் ஆண்டு தொடரின்போது இந்திய அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்களும் ஒரே விமானத்தில் கராச்சியில் இருந்து லாகூர் பயணம் செய்தோம். அப்போது, அப்ரிடி என் அருகே வந்து, அவரது கையை என் தலையில் வைத்து, மசாஜ் செய்வதுபோன்று முடியை பிசைந்தார். அத்துடன் என்னிடம், குழந்தாய்..! எப்படி இருக்கிறாய்? எனக் கேட்டார். அப்போது நான், நீங்கள் எப்போது என் தந்தையானீர்கள்? என்று கேட்டேன்.

    இந்த குழந்தைத்தனமாக பழக்கவழக்கம் அவருடையதுதான். அவர் என்னுடைய நண்பர் கிடையாது. அதன்பின், வெறுக்கத்தக்க சில வார்த்தைகள் என்னை பற்றிக் கூறினார். அவருடைய இருக்கை எனது இருக்கைக்கு வலது பக்கமாக இருந்தது.

    அப்துல் ரசாக் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார். என்ன வகையான இறைச்சிகள் இங்கே (பாகிஸ்தான்) கிடைக்கும் என அப்துல் ரசாக்கிடம் கேட்டேன். அதற்கு அவர், பலவகையான இறைச்சிகள் கிடைக்கும் என பதில் சொன்னார். நான் அவரிடம், நாய்க்கறி கிடைக்குமா? என்று கேட்டேன்.

    இதனால் ரசாக் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், பதான் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது நான் சிறிதும் தயங்காமல் அப்ரிடி நாய்க்கறி சாப்பிட்டுவிட்டார். அவர் நீண்ட காலமாக குறைத்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறினேன்.

    அதன்பின் அப்ரிடியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை. அவர் ஏதாவது சொல்லியிருந்தால் நான், பாருங்கள் மீண்டும் குறைத்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல்லியிருப்பேன். அதன்பின் விமானம் தரையிறங்கும் வரை அப்ரிடி அமைதியாக இருந்தார்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, வார்த்தைப் போரில் என்னை வெல்ல முடியாது என்று அவருக்கு புரிந்திருக்கும். அதன்பின் ஒருபோதும் அவர் என்னிடம் ஏதும் சொன்னதில்லை.

    இவ்வாறு இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.

    • அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால், அணியில் இடம் பிடிக்க முடியாதல் நிலை ஏற்பட்டது.
    • தீவிர பயற்சியால் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

    ரஞ்சி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இவரால் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சிறப்பாக விளையாடி வந்தார்.

    இந்திய அணியில் இடம்பெற முடியாததற்கு இவரது உடல் எடையும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் திறமையான ஆட்டத்தால் இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பிடித்தார்.

    6 போட்டிகளில் விளையாடி 371 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும், 3 அரைசதங்களும் அடங்கும். 150 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    நியூசிலாந்து தொடர் முடிவடைந்து ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு விளையாட இடம் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து சர்பரான் கான் தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். தீவிர முயற்சியால் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

    இனிமேல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் உறுதியாக இடம் கிடைக்கலாம் என நம்பலாம்.

    • ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
    • பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். 2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முகமது ஷமி முன்னுரிமை அளித்தார். ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்தனர். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை.

    எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்த போதிலும் எனது வாழ்க்கையில் விளையாடுகிறார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. பெண்களை ஏமாற்றுபவர்.

    இவ்வாறு ஹசின் ஜகான் கூறியுள்ளார்.

    • கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
    • உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதல் ஆட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடி அரைசதமும், ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் ஆகியோரது அபார பந்து வீச்சும் (தலா 3 விக்கெட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தன. அடுத்த ஆட்டத்தில் டிவால்ட் பிரேவிசின் மின்னல் வேக சதத்தின் (56 பந்தில் 125 ரன்) மூலம் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது.

    ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டத்திலும் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ் சரியாக ஆடாதது பின்னடைவாகும். தவறுகளை திருத்திக் கொண்டு இந்த ஆட்டத்தில் அதிரடியாக ரன் திரட்ட முயற்சிப்பார்கள். உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. இதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு நாள் போட்டி நடந்து கூட 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இதன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இருப்பினும் இங்கு நடந்த பிக்பாஷ் 20 ஓவர் போட்டிகளின் போது ஓரளவு சுழற்பந்து வீச்சு எடுபட்டதால் இரு அணியினரும் சுழலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட் அல்லது மேத்யூ குனேமேன்.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், லுவான் டிரே பிரிட்டோரியஸ், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வான்டெர் டஸன், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபடா, இன்கபா பீட்டர் அல்லது செனுரன் முத்துசாமி, கிவெனா மபகா, இங்கிடி அல்லது நன்ரே பர்கர்

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
    • இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×