என் மலர்
விளையாட்டு
- ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.
இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதையடுத்து இருவரையும் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இதற்கிடையே ஒரு ஆண்டாக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா, 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தனது உடல் தகுதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காது என்று ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.
இதை கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டதால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு கூறியுள்ளோம்.
தற்போதைய நிலைமையில் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் ஹர்த்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். அவர் அதில் விளையாடாவிட்டால் ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என்றார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா உறுதி அளித்த பிறகே அவர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதேபோல் ரோகித் சர்மா, விராட் கோலியும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
- போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
- சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார். இதனால் கால்பந்தில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு நான்கு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போக்பா, ஆடுகளத்தில் மீண்டும் விளையாட முடியாமல், கிட்டத்தட்ட 35 வயது வரை ஓரங்கட்டப்படும் ஒரு நிலையை எதிர்கொள்கிறார். போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.
- இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
- மற்றொரு வீரரான யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி-செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது.
இதில் ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல.
- ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.
இந்திய அணியின் 2023 -24 வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசன் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இஷான், ஷ்ரேயாஸ் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும். இப்போது ஐபிஎல் மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஐபிஎல் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையான கிரிக்கெட் 5 நாட்கள் விளையாடுவதில் தான் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது உங்களுடைய ஃபார்மை தக்க வைக்க உதவும்.
எனவே ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.
அங்கிருந்து தான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
எங்களுடைய கேரியரை துவங்கும் போது நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை.
இவ்வாறு கீர்த்தி ஆசாத் கூறினார்.
- எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
- அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.
அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ரூப்லெவ் 6-4 என வென்றார். 2வது செட்டில் ரூப்லெவ் 4-3 என முன்னிலை பெற்றபோது செபாஸ்டியன் காயத்தால் விலகினார். இதன்மூலம் ரூப்லெவ் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
- 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-இங்கிலாந்தின் ஜேமி முர்ரே, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும்.
- கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், 2019 உலகக் கோப்பையில் இடம் பிடித்தார். அந்த தொடரில் காயத்தால் விலகினார். பின்னர் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையிலும் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர் நேரடியாக ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். அதனால் ஹர்திக் பாண்டியா நாட்டுக்காக தொடர்ந்து விளையாட மாட்டார். ஆனால் பணத்துக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன்.
இப்போதெல்லாம் வீட்டிலேயே இருக்க விரும்புகிறேன். அதனால் 50 நாட்கள் கூட வீட்டை விட்டு வெளியேறாத நேரங்கள் இருந்தன. அதனால் சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் பேசமாட்டேன். அங்கே யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள்.
- அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவு சர்ச்சையாக மாறிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஹர்திக் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர்களும் தேசிய கடமையில் இல்லாதபோது வெள்ளை பந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டுமா? இது அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது.
என்று பதான் கூறியுள்ளார்.
- வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
- இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.
இவ்வாறு துபே கூறினார்.
இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.
2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.
அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆண்டி முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.






