என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் தோலவி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக் மெத்வதேவ் அல்லது யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.

    • பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டார்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து 25 வயதான இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் நீக்கப்பட்டார். பிசிசிஐ-யின் கோரிக்கையை மீறி உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

    தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை என்றாலும் இந்த நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி போட்டிகள்) பங்கேற்ற விளையாடுங்கள் என பிசிசிஐ இஷான் கிஷனிடம் கேட்டுக் கொண்டது. மேலும் ரஞ்சி போட்டியில் விளையாடி பார்மை நிரூபித்த பின்னரே மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

    ஆனால் அப்படி பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது பிசிசிஐ லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து விளையாடியுள்ளார். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    அதாவது சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக பயன்படுத்தும் உபகரங்களை சாதாரண உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் அந்த சின்னங்களை டேப் கொண்டு மறைத்த விட்ட பின்னரே அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

    ஆனால் அதையும் கவனிக்காத இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யின் லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மட்டை உள்ளூர் போட்டியில் பயன்படுத்தியதால் மேலும் ஒரு பஞ்சாயத்தில் அவர் சிக்கியுள்ளார். அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன்.

    2023 -24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

    இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் விளையாட வேண்டும். அது நாட்டுக்கு நல்லது. நாட்டிற்கு எது நல்லதோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள். ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது.

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும். இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • டெஸ்ட் போட்டிகளில் தங்களது முதல் வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 53 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 52 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து 108 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் சுமாராகவே விளையாடியது. இதனால் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து அணிக்கு 111 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்ட பரபரப்பாக இருந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர்-ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இதன் மூலம் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    • டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
    • ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து ஆடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் சிக்சரை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை விளாசினார். அப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்து தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

    முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த காலத்தில் அவரை ஸ்பைடர் மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக், குரோசியாவின் இவான் டூடிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • கேப்டனாக கம்மின்ஸ் 100 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
    • 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றார்.

    நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 174 ரன்களைச் சேர்த்தார்.

    இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 179 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4, ஜோஷ் ஹசில்வுட் 2, கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜாம்பவான்கள் பட்டியலில் அவர் இணைந்தார். இதுவரை 47 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    கேப்டனாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 10-வது வீரர் என்ற சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார். மேலும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றார்.

    இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 71 இன்னிங்சில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா) 56 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 138 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 58 இன்னிங்சில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

    இம்ரான் கான் - 187 விக்கெட்டுகள் (71 இன்னிங்சில்)

    ரிச்சி பெனாட் - 138 விக்கெட்டுகள் (56 இன்னிங்சில்)

    கேரி சோபர்ஸ் - 117 விக்கெட்டுகள் (69 இன்னிங்சில்)

    டேனியல் வெட்டோரி - 116 விக்கெட்கள் (54 டெஸ்ட் இன்னிங்சில்)

    கபில் தேவ் - 111 விக்கெடுகள் (58 டெஸ்ட் இன்னிங்சில்)

    வாசிம் அக்ரம் - 107 விக்கெட்டுகள் (46 டெஸ்ட் இன்னிங்சில்)

    பிஷன் பேடி - 106 விக்கெட்டுகள் (39 டெஸ்ட் 106 விக்கெட்டுகள்)

    ஷான் பொல்லாக் - 103 விக்கெட்கள் (50 டெஸ்ட் இன்னிங்சில்)

    ஜேசன் ஹோல்டர் - 100 விக்கெட்டுகள் (63 டெஸ்ட் இன்னிங்சில்)

    பாட் கம்மின்ஸ் - 100 விக்கெட்டுகள் (47 இன்னிங்சில்)*

    • ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர்.
    • இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    ரியாத்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.

    இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 179 ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வில்லியம்சன் 0 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவரில் மிட் ஆப் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க வில்லியம்சன் ஓடிய போது எதிரே ஓடி வந்த யங் மீது மோதினார். இதனால் இருவரும் நடுபிட்சில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர் லெபுசன் நேரடியாக ஸ்டெம்பில் அடித்தார்.

    இந்த ரன் அவுட் மூலம் அவரது 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வில்லியம்சன் ரன் அவுட் ஆகி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    • காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
    • மும்பையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சவாலானதாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரும், முதல்தர கிரிக்கெட் தொருடருமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அரைஇறுதி ஆட்டங்கள் நாளை முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் முதல் அரை இறுதியில் விதர்பா- மத்திய பிரதேசமும், மும்பையில் நடக்கும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகளும் மோதுகின்றன. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணியில் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பூபதி குமார் சந்தீப் வாரியர், முகமது அஜித்ராய் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    ரகானே தலைமையிலான மும்பை அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், முஷீர் கான், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ஒருவேளை போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக கருதப்பட்டு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறும்.

    எலைட் குரூப் சியில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு ஏழு போட்டிகளில் 4-ல் வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா மூலம் காலிறுதிக்கு முன்னேறியது.

    தமிழ்நாடு அணி காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 

    • முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
    • நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து சொற்ப ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    கேமரூன் கிரீன்

    204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ×