search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI logo"

    • பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டார்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்து 25 வயதான இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் நீக்கப்பட்டார். பிசிசிஐ-யின் கோரிக்கையை மீறி உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

    தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை என்றாலும் இந்த நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி போட்டிகள்) பங்கேற்ற விளையாடுங்கள் என பிசிசிஐ இஷான் கிஷனிடம் கேட்டுக் கொண்டது. மேலும் ரஞ்சி போட்டியில் விளையாடி பார்மை நிரூபித்த பின்னரே மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

    ஆனால் அப்படி பிசிசிஐ கூறிய கருத்தினை கேட்காத இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது பிசிசிஐ லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து விளையாடியுள்ளார். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    அதாவது சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக பயன்படுத்தும் உபகரங்களை சாதாரண உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் அந்த சின்னங்களை டேப் கொண்டு மறைத்த விட்ட பின்னரே அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

    ஆனால் அதையும் கவனிக்காத இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யின் லோகோ பொறிக்கப்பட்ட ஹெல்மட்டை உள்ளூர் போட்டியில் பயன்படுத்தியதால் மேலும் ஒரு பஞ்சாயத்தில் அவர் சிக்கியுள்ளார். அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ×