என் மலர்
விளையாட்டு
- பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
- ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி புள்ளி பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால், அந்த அணியின் தற்காலிக கேப்டனாக சாம் கர்ரன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து அந்த அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா பேட்டியளித்தார்.
பேட்டியின் போது பேசிய அவர் பஞ்சாப் அணியில் தற்போது நிலைத்தன்மை மற்றும் சாம்பியன் மனநிலை கொண்ட ஒருவர் இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரோகித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கு என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன். எங்களது அணியில் நிலைத்தன்மை, சாம்பியன் மனநிலையை கொண்டுவரும் ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- கேப்டன் கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார்.
- நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 27 பந்துகளில் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்களையும், ஆயுஷ் பதோனி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. கடைசி ஓவர்களில் நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்தார்.
கொல்கத்தா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரெ ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
- சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதுவரை கொல்கத்தா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில், இந்த போட்டியின் மூலம் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள லக்னோ அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
- நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.
ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.
சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி கேப்டனாக பார்க்கலாம்.
ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.
- உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.
- பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது
- இதில் நேபாள வீரர் திபேந்திர சிங் டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.
அல் அமிராட்:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோத உள்ளார்.
- கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹெட்மையர் ரன் எடுக்கவில்லை.
- 3-வது மற்றும் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ரன்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ரன்), இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். அதேசமயம் ரபடா அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.
பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 9-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கோட்டியன் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16-வது ஓவரில்களில் முறையே 9 மற்றும் 6 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ரியான் பராக் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ஜுரேல் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.
16 பந்துக்கு 33 ரன்கள் என்ற நிலையில் ஹெட்மையர் உடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் பவுண்டரிக்கு விரட்டியதுடன், கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் 18-வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மையர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மையர் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஹெட்மையர்.
இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் அடித்த ஹெட்மையர் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும் அடித்தனர்.
- இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் விளையாடவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் அதர்வா தைடே, பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதர்வா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்.
பவர் பிளேயில் பஞ்சாப் அணி 38 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 19 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை நோக்கிச் சென்றது.
கேப்டன் சாம் கர்ரன் 10 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும், இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் தோல்வி அடைந்தார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், கிரீஸ் வீரட் சிட்சிபாசுடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். முதல் செட்டை ரூட் 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ரூட் ஆதிக்கம் செலுத்தினார். ஆகையால் 3-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி 2-1 என ரூட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் எடுத்துள்ளார்.
- ராஜஸ்தான் ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று 5-வது வெற்றியை பதிவு செய்யும் வகையில் களம் காண்கிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று சண்டிகரில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணியில் இன்று அந்த அணியின் கேப்டன் தவான் களம் இறங்கவில்லை. அதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது.






