search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்
    X

    ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

    • ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும் அடித்தனர்.
    • இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் விளையாடவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் அதர்வா தைடே, பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதர்வா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்.

    பவர் பிளேயில் பஞ்சாப் அணி 38 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 19 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை நோக்கிச் சென்றது.

    கேப்டன் சாம் கர்ரன் 10 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆனால் ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும், இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×