என் மலர்
விளையாட்டு
- ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
- பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.
பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- நேற்று சிஎஸ்கே அணிக்கெதிராக ஐந்து சிக்ஸ் விளாசினார்.
- கிறிஸ் கெய்ல் 1056 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மாவின் அதிரடியான சதம் நேற்று பலன் இல்லாமல் போனது. அவர் 63 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 105 ரன் எடுத்தார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டியில் 500 சிக்சர்களை கடந்மு சாதனை படைத்தார்.
419 இன்னிங்சில் அவர் 502 சிக்சர்கள் அடித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 500 சிக்சர்கள் எடுத்த முதல் இந்தியர் ஆவார்.
ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்ல் (1,056 சிக்சர்கள்), பொல்லார்டு (860), ஆந்த்ரே ரஸல் (678), கொலின் முன்ரோ (548) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா உள்ளார்.
முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்தை சேர்ந்தவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
- பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (319 ரன்) அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.
- பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது.
பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும், 28 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (319 ரன்) அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 32 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறுவது அந்த அணிக்கு தலைவலியாக இருக்கிறது. மேலும் அந்த அணியின் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி கட்டுக்கோப்பாக பந்து வீசி எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறுகின்றனர்.
மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் ஆடி 196 ரன்கள் எடுத்தாலும், அடுத்து ஆடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு அந்த இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது. இது பெங்களூரு அணியின் பந்து வீச்சு பலவீனத்துக்கு ஒரு உதாரணமாகும். முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, விஜய்குமார் வைஷாக் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் தங்களது தவறுகளை சரிசெய்து ஒட்டுமொத்தமாக எழுச்சி காண வேண்டியது அவசியமானதாகும்.
ஐதராபாத் கணிக்க முடியாத ஒரு அணியாக விளங்குகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதன் பிறகு 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் வீழ்த்தியது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், மார்க்ரமும், பந்து வீச்சில் கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட்டும் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் அகமது, மயங்க் மார்கண்டே ஏற்றம் பெற வேண்டியது தேவையான ஒன்றாகும்.
சரிவில் இருந்து மீண்டு வர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்கள் அதிரடியை தொடர ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டத்தில் ஐதராபாத்தும், 10 ஆட்டத்தில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், விஜய் குமார் வைஷாக், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லே, முகமது சிராஜ்.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க் ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிட்சிபாஸ் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னரை 2-1 என வீழ்த்தியிருந்தார்.
- காஸ்பர் ரூட் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை 2-1 என வீழ்த்தியிருந்தார்.
மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் 8-ம் நிலை தரநிலை வீரரான நார்வேயினி் காஸ்பர் ரூட்- 12-ம் தரநிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
தரநிலையில் 1-ம் இடம் பிடித்திருந்த ஜோகோவிச்சை வீழ்த்தி ரூட், 2-ம் நிலை வீரர் சின்னரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ்க்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ரூட் அரையிறுதியில் ஜோகோவிச்சை 6-4, 1-6, 6-4 என வீழ்த்தியிருந்தார். சிட்சிபாஸ் சின்னரை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது.
- நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அது வித்தியாசம் என்பதை நிரூபித்தது. இது போன்ற மைதானத்தில் எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், நாங்கள் எங்கள் பந்து வீச்சின் திட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்து என நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் 60 ரன்கள் எடுத்திருக்கனும். எங்களுடைய மலிங்காவின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ரகானேவுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால் தொடங்க வீரராக களம் இறக்கினால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு சரியானதுதான். அது ஒரு கேப்டனாக கூடுதலாக பொறுப்பு.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- ஷிவம் டுபே, ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினர்.
- எம்.எஸ். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
சென்னையிடம் தோல்வியடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
207 இலக்கு என்பது எட்டக்கூடியதுதான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். திட்டத்திலும் அணுமுறையிலும் ஸ்மார்ட்டாக இருந்தனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டம்பிற்கு பின்னால் இன்று சொல்லிக்கொடுக்கும் டோனி என்ற நபரை அவர்கள் பெற்றிருந்தனர். அது அவர்களுக்கு உதவியாக இருந்தது.
பதிரனா பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்துவதற்கு முன்பு வரை நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம். அடுத்த நான்கு போட்டிகளை எதிர்நோக்கி இருக்கிறோம். அதை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீவிரம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- 2008-ல் சிஎஸ்கே அணிக்கெதிராக ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார்.
- அதன்பின் ரோகித் சர்மா தற்போது சிஎஸ்கே அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, ஐந்து சிக்ஸ் உடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாக பார்க்கப்படும். இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் அறிய ஆவலாக இருப்பார்கள்.
இரு அணிகளுக்கு இடையில் ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு சுமார் 16 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து ரோகித் - திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி திலக் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
- கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
- இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கேப்டனாக 2-வது அரை சதத்தை ருதுராஜ் பதிவு செய்தார்.
- மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரகானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரச்சின் 21 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் விளாசினார். கேப்டனாக அவரின் 2-வது அரைசதம் இதுவாகும். அவர் 69 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே அரைசதம் விளாசினார்.
இந்த தொடரில் மோசமாக விளையாடி வரும் மிட்செல் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 4 பந்துகளுக்கு களம் புகுந்த டோனி ஹட்ரிக் சிக்ஸ் விளாசி அசத்தினார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
- சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.
அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- துவக்க வீரரான பில் சால்ட் அதிரடியாக விளையாடினார்.
- மோசின் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 27 பந்துகளில் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்களையும், ஆயுஷ் பதோனி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. கொல்கத்தா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரெ ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
162 ரன்களை துரத்திய லக்னோ அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்களிலும், அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் மோசின் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






