என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvsCSK"

    • சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதியுள்ளது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்ககியது.

    இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

    இதைதொடர்ந்து, 177 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

    அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    ×