என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜப்பான் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
    • 50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் காண்கிறார்.

    சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோநோகா ஒசாக்கியை எதிர்கொள்கிறார். 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் காலியுறுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அவரை வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் தமன்னா 0-9 என தோல்வியடைந்த நிலையில், அவர் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பதக்கத்திற்கான போட்டியில் நீடிக்கிறார்.

    அதேபோல் புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) ஆகியோரும் தோல்வியடைந்தாலும் பதக்கப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களை வீழ்த்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

    • முதல் நான்கு போட்டிகளிலும் 1-5, 2-4, 1-2, 1-3 என இந்தியா தோல்வியடைந்திருந்தது.
    • இன்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் 2-3 எனத் தோல்வியடைந்தது ஒயிட்வாஷ் ஆனது.

    இந்திய ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-5, 2-4, 1-2, 1-3 எனத் தோல்வியடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எப்படியாவது ஒயிட்வாஷ் ஆவதை தடுக்க இந்தியா முயற்சித்தது. இருந்த போதிலும் 2-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி கேபடன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியா 20-வது, 38-வது மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. 53-வது நிமிடத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது.

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. என்றபோதிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியுள்ளது.

    ஆனால் தோல்வியடைந்த முதல் 3 போட்டிகளில் முழுமையாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த 2 போட்டிகளில் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீசி வருவதை பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இப்படி, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு" என்று தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை.
    • சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் ) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 2 போட்டியிலும் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் மும்பை இந்தியன்சை நாளை ( 14-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை. மேலும் மும்பை இந்தியன்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானது.

    சி.எஸ்.கே. அணியின் பேட்டிங்கில் ஷிவம் துபே (176 ரன்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (155) நல்ல நிலையில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, மிச்சேல், ரகானே, டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் முஸ்டா பிசுர் ரகுமான் 9 விக்கெட்டும், துஷார் தேஷ் பாண்டே 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளன.

    ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பான நிலையில் இருக்கிறார். நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. தீக்ஷனா நீக்கப்பட்டு பதிரனா இடம் பெறலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்திலும் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான்) தோற்றது. அதை தொடர்ந்து 2 போட்டியில் (டெல்லி, பெங்களூரு) வெற்றி பெற்றது. 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் அந்த அணி இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. கடந்த 2 ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    மும்பை அணியின் பேட்டிங்கில் இஷான்கிஷன் (161) ரன், ரோகித்சர்மா (156), திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (10 விக்கெட்), கோயட்சி (8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் சிட்சிபாஸ், சின்னருடன் மோதுகிறார்.

    • இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார்.
    • மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'நாட்டுக்கான வேலை செய்வதை எல்லா வகையிலும் நான் பெருமையாக கருதுகிறேன். அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன். இந்த கவுரவமிக்க பொறுப்பில் என்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    தனிப்பட்ட காரணத்துக்காக இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்குவது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் இதனை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது நாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேரி கோம் விலகலை உறுதிப்படுத்தி இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, 'தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகியது வருத்தம் அளிக்கிறது. மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்' என்றார்.

    • பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள்.
    • தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா?

    இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பொறுப்பில் இருந்தும் ஒதுங்கினார்.

    மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் கூட்டாளியான இவருக்கும் சில வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத், தன்னை ஊக்கமருந்து வலையில் சிக்கவைக்க சதி நடப்பதாக பரபரப்பான புகார் கூறியுள்ளார். வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டிலும் சாம்பியன். 50 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்யும் இலக்குடன் அடுத்த வாரம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளார்.

    வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லா பயிற்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள். எனவே எனக்குரிய போட்டியின்போது அவர்கள் நான் குடிக்கும் தண்ணீரில் ஏதாவது கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. என் மீது ஊக்கமருந்து மோசடி பேர்வழி என்ற முத்திரை குத்துவதற்கு சதிவேலை நடக்கிறது.

    கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அட்டை வழங்கும்படி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) முறையிட்டு வருகிறேன். அங்கீகார அட்டை இல்லாவிட்டால் அவர்களால் என்னுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு வர முடியாது. பல முறை கேட்டும் அவர்களிடம் இருந்து எனக்கு முறையான பதில் வரவில்லை. உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?

    போட்டிக்கு முன்பாக எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா? தேசத்துக்காக விளையாட செல்லும் முன்பு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இதற்கிடையே வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத மல்யுத்த சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனது தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அனுமதி அட்டை கேட்டு கடந்த மார்ச் 18-ந்தேதி வினேஷ் போகத் இ-மெயில் அனுப்பினார். ஆனால் அதற்கு முன்பாகவே (மார்ச் 11) உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே 9 பயிற்சியாளர்கள் அணியினருடன் செல்லும் நிலையில் கூடுதல் பயிற்சியாளர் தேவையா?, வினேஷ் போகத் தனிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று நினைத்தால், உலக மல்யுத்த சம்மேளனத்தை அணுகி முயற்சித்து பார்க்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றார்.

    • பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி.
    • ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி.

    17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
    • லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார்.
    • குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லாங்கோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்த போட்டியில் தோற்பது ஜெயிப்பது பற்றி எனக்கு கவலையில்லை.
    • ஆனால் ஃபேர் பிளே விருது மிகவும் முக்கியம்.

    அஸ்வினின் யூடியூடிப் சேனலின் "குட்டி ஸ்டோரி வித் அஷ்" பாகம் 2-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி டோனி இளம் வீரர்களின் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பது குறித்து கூறியதாவது:-

    சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் இந்த போட்டியில் தோற்பது ஜெயிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஃபேர் பிளே விருது மிகவும் முக்கியம். அதற்காக விளையாடுங்கள் என டோனி வீரர்களிடம் கூறினார். எனக்கு அப்போது அது வினோதமாக தெரிந்தது. ஆனால் போட்டி முடிந்து ஓட்டலுக்கு சென்றபோது இளம் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடியதை பற்றி சொல்லும்போது அவர் ஏன் அதைச் சொன்னார் என புரிந்து கொண்டேன்

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் கச்சனோவுடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், டென்மார்க் வீரர் ரூனேவுடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 7-6 (8-6) என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×