என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டோனி ஃபேர் பிளே விருது முக்கியம் எனக் கூறியது வினோதமாக இருந்தது: விவரிக்கும் மைக் ஹஸ்சி
- இந்த போட்டியில் தோற்பது ஜெயிப்பது பற்றி எனக்கு கவலையில்லை.
- ஆனால் ஃபேர் பிளே விருது மிகவும் முக்கியம்.
அஸ்வினின் யூடியூடிப் சேனலின் "குட்டி ஸ்டோரி வித் அஷ்" பாகம் 2-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி டோனி இளம் வீரர்களின் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பது குறித்து கூறியதாவது:-
சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் இந்த போட்டியில் தோற்பது ஜெயிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஃபேர் பிளே விருது மிகவும் முக்கியம். அதற்காக விளையாடுங்கள் என டோனி வீரர்களிடம் கூறினார். எனக்கு அப்போது அது வினோதமாக தெரிந்தது. ஆனால் போட்டி முடிந்து ஓட்டலுக்கு சென்றபோது இளம் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடியதை பற்றி சொல்லும்போது அவர் ஏன் அதைச் சொன்னார் என புரிந்து கொண்டேன்
Next Story






