search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பை கேப்டன் பாண்ட்யாவிற்கு காயமா? - நியூசிலாந்து முன்னாள் பவுலர் கூறிய அதிர்ச்சி தகவல்
    X

    மும்பை கேப்டன் பாண்ட்யாவிற்கு காயமா? - நியூசிலாந்து முன்னாள் பவுலர் கூறிய அதிர்ச்சி தகவல்

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியுள்ளது.

    ஆனால் தோல்வியடைந்த முதல் 3 போட்டிகளில் முழுமையாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த 2 போட்டிகளில் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீசி வருவதை பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இப்படி, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு" என்று தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×