என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
    • இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார். வலைப் பயிற்சியின் போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

    • முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது.
    • 2வது போட்டி ராஜ்கோட்டிலும், 3வது போட்டி இந்தூரிலும் நடக்கிறது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.

    இந்திய அணி:

    சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் , நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால்.

    நியூசிலாந்து அணி:

    மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார்.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

    விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27,975 ரன்களை எடுத்துள்ளார். இன்னமும் 25 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.

    சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் 28,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

    சச்சின் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34,357 ரன்களை எடுத்தார். 1989 முதல் 2013 வரை இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சராசரி, 48.52ஆக இருக்கிறது. 100 சதம், 164 அரை சதங்களை சச்சின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
    • டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    வதோதராவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. நாட் ஸ்கீவர் பிரண்ட் 70 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ஆடி 42 பந்தில் 74 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    சினேலி ஹென்றி தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், டெல்லி அணி 19 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    மும்பை அணி சார்பில் அமீலியா கெர், நிகோலா கேரி தலா 3 விக்கெட்டும், நாட் ஸ்கீவர் பிரண்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரண்டன் நகஷிமாவை சந்திக்கிறார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்கள் குவித்தார்.

    நவிமும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக அமேலியா கெர்- கமாலினி களமிறங்கினர். இதில் கெர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து கமாலினி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து நாட் ஸ்கிவர்-பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்கிவர் 46 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த நிக்கோலா கேரி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.

    • இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
    • இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    மேலும் பயிற்சி முடிந்த பிறகு சிறுவர்களுடன் சீனியர் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக அதில் ஒரு சிறுவன் சிறுவயது விராட் கோலி போல் இருப்பதால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    • தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.
    • உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சோபி டிவைன், அனுஷ்கா சர்மா, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

    கடினமான இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக டியான்ட்ரா டோட்டின், மெக் லேனிங் இதில் டோட்டின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லேனிங் மற்றும் போப் லிட்ச்பீல்ட் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    குறிப்பாக போப் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய லேனிங் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த வீராங்கனைகளான தியோல் (0), தீப்தி ஷர்மா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    • நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
    • நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் நாளை நடக்கவிருக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் கோலி குறித்து இந்திய அணியின் புதிய கேப்டனான சுப்மன் கில்லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சுப்மன் கில் கூறியதாவது:-

    நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வீரர்களில், ஒருவர் ஒருநாள் போட்டிகளில் எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் (ரோஹித்), விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே, நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.

    மேலும் நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அத்தகைய சூழ்நிலைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்பதை அறிய நீங்கள் அவர்களிடம் செல்லலாம். அந்தத் தகவல் எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.

    என சுப்மன் கில் கூறினார்.

    • குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் விளாசினார்.
    • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபி டிவைன், பெத் மூனி களமிறங்கினர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிவைன் அனுஷ்கா சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    டிவைன் 38 ரன்னிலும் அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    ×