என் மலர்
விளையாட்டு
- குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் விளாசினார்.
- 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபி டிவைன், பெத் மூனி களமிறங்கினர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிவைன் அனுஷ்கா சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
டிவைன் 38 ரன்னிலும் அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.
- டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை.
- தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
மும்பை:
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை.
அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும், இஷான் கிஷன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது என டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுப்மன் கில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
எப்போது கடந்த விஷயங்களை பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கும் பழக்கம் இல்லை. வாழ்க்கையின் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைப்பேன். இந்திய அணிக்காக விளையாடும் போது, ஒவ்வொரு வடிவமும் சவால் நிறைந்தது தான். ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2011ல் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் வெல்ல முடியவில்லை. ஒருநாள் வடிவம் எளிதானது என்று சொல்லிவிடலாம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவமும் எளிதாக இருக்காது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம். மனதளவில் தயாராக வேண்டியதும் முக்கியம்.
என்று கில் கூறினார்.
- பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிவி சிந்து வாங் ஜி யியை எதிர் கொண்டார்.
- இந்த ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருப்பவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சிந்து தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் ஜி யியை (சீனா) மோதினர்.
இந்த போட்டியில் பிவி சிந்து 16-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
- அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பால் ஸ்டிர்லிங் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறு கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப் பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, நமீபியா, ஓமன், நேபாளம் ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர் ஆவார். லார்கன் டக்கட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த உலக கோப்பையில் இடம்பெற்ற வீரர்களில் 12 பேர் இந்த முறையும் தேர்வாகியுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி வருமாறு:-
பால் ஸ்டீர்லிங் (கேப்டன்) மார்க் ஆதிர், பென்கால்ட்ஸ், கேம்பெர், டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப் ரேஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஹாரி டக்கர், லார்கன் டக்கெட், பென் ஒயிட், கிரேக் யங்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
- ஒலிம்பிக் சாம்பியனான குயின்வென் ஜெங் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி:
டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான குயின்வென் ஜெங் விலகியுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், போட்டிகளில் இருந்து விலகியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆர்.சி.பி. அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
மும்பை:
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு154 ரன்கள் எடுத்தது. சஜீவன் சஜனா 45 ரன்கள் எடுத்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடித்தார்.
ஆர்.சி.பி. அணி சார்பில் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நடின் டி கிளார்க் தனி ஆளாக போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடின் டி கிளார்க் 63 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற இருந்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் 2வது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்தின் கமில் மஜாக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி 6-3, 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் அகஷிமா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் முகம்மது ஷோஹிபுல் பிக்ரி-பஜர் அல்பியான் ஜோடி உடன் மோதியது.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சாத்விக் - சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
- ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜி. கமாலினி 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
சஜீவன் சஜனா 25 பந்தில் 45 ரன்கள் அடித்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. பேட்டிங் செய்து வருகிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை விடுவித்தது.
- இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் தங்களது போட்டியை வேறு இடத்தில் நடத்த வங்கதேசம் கோரிக்கை.
வங்கதேசத்தில் இந்திய நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் இடம் பிடித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிசிசிஐ, அவரை விடுக்க கொல்கத்தா அணியிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி கொல்கத்தா அணியும் அவரை விடுவித்தது.
இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடுங்கோபம் அடைந்தது. இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இந்தியாவுக்கு வெளியில் நடத்த வேண்டும் என ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்தது. அத்துடன் ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதித்தது.
வங்கதேசத்தின் இந்த செயல்பாடு குறித்து, அந்நாட்டின் முன்னணி தொடக்க வீரரான தமிம் இக்பால், உலக கோப்பையில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் போர்டின் டைரக்டர் எம். நஸ்முல் இஸ்லாம், "இந்த முறை, வங்கதேச மக்கள் தங்களது சொந்தக் கண்களால், மற்றொரு நிரூபிக்கப்பட்ட இந்திய உளவாளியின் தோற்றத்தைக் கண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- முதல்தர வீராங்கனையாக சபலென்கா 2-0 என எளிதாக வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் பெகுலா 6-3, 7(7)-6(3) என வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
ஒரு காலிறுதி போட்டியில் முதல்தர வீராங்கனையாக சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-3 நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார். இதில் 11-ம் நிலை வீராங்கனையான முட்சோவா முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ரைபாகினா 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் போட்டிப்போட்டு விளையாடினர். என்றாலும் முட்சோவா 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.






