என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தமிம் இக்பால் இந்திய உளவாளி: வங்கதேச கிரிக்கெட் அதிகாரி கொந்தளிப்பு
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை விடுவித்தது.
- இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் தங்களது போட்டியை வேறு இடத்தில் நடத்த வங்கதேசம் கோரிக்கை.
வங்கதேசத்தில் இந்திய நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் இடம் பிடித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிசிசிஐ, அவரை விடுக்க கொல்கத்தா அணியிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி கொல்கத்தா அணியும் அவரை விடுவித்தது.
இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடுங்கோபம் அடைந்தது. இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இந்தியாவுக்கு வெளியில் நடத்த வேண்டும் என ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்தது. அத்துடன் ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதித்தது.
வங்கதேசத்தின் இந்த செயல்பாடு குறித்து, அந்நாட்டின் முன்னணி தொடக்க வீரரான தமிம் இக்பால், உலக கோப்பையில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் போர்டின் டைரக்டர் எம். நஸ்முல் இஸ்லாம், "இந்த முறை, வங்கதேச மக்கள் தங்களது சொந்தக் கண்களால், மற்றொரு நிரூபிக்கப்பட்ட இந்திய உளவாளியின் தோற்றத்தைக் கண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






