என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 3 பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது.
    • அர்ஷ்தீப் சிங் இடம் பெறாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா உடன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது. சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (வி.கீ.) ஆகிய பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியுள்ளது.

    இந்திய டி20 அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் விளங்கி வருகிறார். அவருக்கு மற்ற வடிவிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்றைய போட்டியில் கூட முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் இந்தியா, இடது கை பந்து வீச்சாளரான அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் "அர்ஷ்தீப் சிங்கை எங்கே? அவ்வளவுதான்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    26 வயதான அர்ஷ்தீப் சிங் 72 டி20 போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

    • நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க தவறினார்.
    • இருவரும் 60 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.

    இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.

    நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது.
    • இந்த போட்டிக்காக விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வதோதராவில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வதோதராவைச் சேர்ந்த இளம் பந்து வீச்சாளர்கள் நெட் பவுலர்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விராட் கோலிக்கு நன்றாக பந்து வீசினர். அவர்கள் பந்து வீச்சில் விராட் கோலி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார்.

    தனக்கு பந்து வீசிய இளைஞர்களுக்கு கையெழுத்திட்ட பந்துகளை வழங்கினார். அத்துடன் உத்வேகம் அளிக்கும் வகையில் டிப்ஸ் வழங்கினார்.

    நெட் பவுலர்களுடன் உரையாடிய விராட் கோலி "ஒரு பந்து வீச்சாளராக எனக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தானாகவே எதையும் செய்யாமல், நான் தவறு செய்வதற்காகவோ அல்லது பந்து தானாகவே அடிக்கும் வகையில் வருவதற்காக காத்திருந்தால், அப்போது பந்து வீச்சாளருக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அதனால், ரன்கள் விட்டுக் கொடுத்தால் அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், அதை தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். நான் வீச விரும்பும் பந்தைத்தான் நான் வீசுவேன். ஒரு பேட்ஸ்மேன் விரும்பும் பந்தை நான் வீசப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.

    • சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
    • சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.

    ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரீனா சபலென்காவும், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக்கும் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    அரையிறுதியில் கோஸ்ட்யூக் அமெரிக்காவின் பெகுலாவை 6-0, 6-3 என வீழ்த்தியிருந்தார். சபலென்கா ரஷியாவின் செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என வீழ்த்தியிருந்தார்.

    சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 80 சதவீதம் வெற்றியை பெற்றார். கோஸ்ட்யூக் 57 சதவீதம் வெற்றிகளை பெற்றார். சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.

    சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.

    • 130க்கும் மேற்பட்ட Anime தொடர்களை Crunchyroll வழங்கி வருகிறது
    • பிரபல Anime ஓடிடி தளமான Crunchyroll, இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவுள்ளது

    Anime தொடர்களை இந்தியாவில் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரபல Anime ஓடிடி தளமான Crunchyroll, இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை தனது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.

    ஏற்கனவே இந்தியாவில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 130க்கும் மேற்பட்ட Anime தொடர்களை Crunchyroll வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன.
    • இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கவுள்ளது.

    • FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    இந்நிலையில், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக FIFA உலகக்கோப்பை இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

    உலகக் கோப்பை வென்ற முன்னாள் பிரேசில் வீரரும் ஃபிஃபா ஜாம்பவானுமான கில்பர்டோ டி'சில்வா மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

    உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
    • இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார். வலைப் பயிற்சியின் போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

    • முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது.
    • 2வது போட்டி ராஜ்கோட்டிலும், 3வது போட்டி இந்தூரிலும் நடக்கிறது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.

    இந்திய அணி:

    சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் , நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால்.

    நியூசிலாந்து அணி:

    மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார்.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

    விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27,975 ரன்களை எடுத்துள்ளார். இன்னமும் 25 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.

    சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் 28,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

    சச்சின் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34,357 ரன்களை எடுத்தார். 1989 முதல் 2013 வரை இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சராசரி, 48.52ஆக இருக்கிறது. 100 சதம், 164 அரை சதங்களை சச்சின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
    • டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    வதோதராவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    ×