என் மலர்
விளையாட்டு
- இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- மும்பை அணியுடனான போட்டியில் சென்னை கேப்டன் விக்ராந்த் சதம் அடித்தார்.
ஒவ்வொரு வருடமும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சிசிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் வேல்ஸ் சென்னை கிங்ஸ், கர்நாடகா புல்டோசர்கள், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் தே ஷெர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் சென்னை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது. அரையிறுதிக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்ற சொல்லப்பட்டது.
சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மும்பை அணியுடனான போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் தான் சென்னை அணி அரையிறுதிக்கு போக முடியும் என்ற சூழல் உருவானது.
கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க மறுபக்கம் சென்னை அணி மும்பைக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் நேற்றைய முக்கியமான போட்டியில் சதம் விளாசி தன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும் ஆதவ் கண்ணதாசன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்
விக்ராந்த் சதம் அடித்த பிறகு மெர்சல் விஜய் ஸ்டைலில் அந்த சதத்தை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தவெக தொண்டர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- ஜெசிகா பெகுலா மோதினார்கள்.
- பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான மேடிசன் கீஸ் ( அமெரிக்கா)- ஆறாவது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள்.
இதில் கீஸ் தோற்று வெளியேறினார். பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 18 நிமிட நேரம் தேவைப்பட்டது.
பெகுலா கால் இறுதியில் 4-வது வரிசையில் உள்ள அமன்டா அனிஸ்மோவா (அமெரிக்கா) அல்லது சின்யு வாங்கை (சீனா) சநதிக்கிறார்.
- டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
- 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதையடுத்து பேசிய அபிஷேக் ஷர்மா, "12 பந்துகளில் அரை சதம் என்ற யுவராஜின் சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.
டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டீன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லேர்னர் டீன் 6-4, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து மெத்வதேவ் வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் நான்காவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (8-6), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 158 ரன்கள் எடுத்தது.
கேப் டவுன்:
எஸ்.ஏ. டி20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.
சன்ரைசர்ஸ் சார்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஒரு கட்டத்தில் 48 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இணைந்த மேதிவ்-ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். மேதிவ் 68 ரன்னும், ஸ்டப்ஸ் 63 ரன்னும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது டிவால்ட் பிரேவிசுக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் நான்காவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 7-6 (1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடனும், கோகோ காப் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடனும் மோதுகின்றனர்.
- பெர்த்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
பெர்த்:
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், ஹென்ரிக்ஸ் ஆகியோர் 24 ரன்கள் எடுத்தனர்.
பெர்த் ஸ்கார்சர்ஸ் சார்பில் டேவிட் பைன், ஜேய் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், பியர்ட்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுடன், 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 44 ரன்னும், பின் ஆலன் 33 ரன்னும், ஜோஷ் இங்லிஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்சர்ஸ் பெற்றது.
ஆட்ட நாயகன் விருது டேவிட் பைனுக்கும், தொடர் நாயகப் விருது சாம் ஹார்பருக்கும் அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
- 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 3வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- பிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் தலையீடு வங்கதேசத்திற்குதான் இழப்பு
- இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.
ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடு தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். , இது பாகிஸ்தானின் "குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது, இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு "இரண்டுக்கு ஒன்று" (2 vs 1) என்ற போட்டியை உருவாக்கும் தேவையற்ற முயற்சி என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து "ஏற்கனவே பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுகிறது. இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவையில்லாத விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதனால் வங்கதேச கிரிக்கெட் அணியும் அதன் வீரர்களும்தான் பாதிப்படைவார்கள். உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் இழப்பது மிகப்பெரியது. இந்தியாவுக்கு வரவில்லை என்று நேரடியாக மறுப்பு தெரிவிக்கும் முன், ஐசிசியுடன் கலந்துரையாடுவதற்கான வழிகளை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பை இங்கிலாந்திலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ நடத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட இல்லை, ஆனால் இங்கே அவர்கள் உண்மையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம். எனவே இது யாருடைய தோல்வியும் அல்ல, வங்கதேசத்தின் தோல்வி" என தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.
- பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
SA20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இந்தாண்டு நடந்து வருகிறது.
SA20 லீக்கின் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேபிடல்ஸ் வீரர் டெவால்ட் பிரேவிஸ் சதம் அடித்து அசத்தினார். 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் SA20 லீக் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை டெவால்ட் பிரேவிஸ் படைத்தார்






