என் மலர்
விளையாட்டு
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பான் வீராங்கனையும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.
இதில் நவோமி ஒசாகா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- 3வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் ஜேசன் குணாவன் உடன் மோதினார்.
இதில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டரே முல்லர், பிரேசிலைச் சேர்ந்த தியாகோ செய்போ உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற முல்லர், அடுத்த இரு செட்களை 7-5, 7-6 (8-6) என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த மும்பை அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ஜார்ஜியா வோல் அரை சதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்னும், தீப்தி ஷம்ரா 27 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி அமெலியா கெர் 5 விக்கெட்டும், ஹெய்லி மேத்யூஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஹெய்லி மேத்யூஸ் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு ஹெய்லி மேத்யூஸ்-நட் சீவர் பிரண்ட் ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. நட் சீவர் பிரண்ட் 37 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4வது வெற்றி ஆகும்.
- அரவிந்த் சிதம்பரம் 7-வது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
- பிரக்ஞானந்தா 2வது இடத்தில் நீடிக்கிறார்.
பிராக்:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 7வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யூ உடன் மோதினார்.
வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.
இதேபோல், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலில் ரஷியாவின் அனிஷ் கிரியுடன் மோதி வெற்றி பெற்றார்.
இதையடுத்து,76-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
- துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியாவும், 2-வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்தும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரைபல் (வயது 58), இங்கிலாந்தை சேர்ந்த இல்லிங்வொர்த் (வயது 61) ஆகிய கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரைபல் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நடுவராக பணியாற்றினார். இல்லிங்வொர்த் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது நடுவராக பணியாற்றினார்.
இல்லிங்வொர்த் நான்கு முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை வென்றுள்ளார். இவர் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
3-வது நடுவராக ஜோல் வில்சன், 4-வது நடுவராக குமார் தர்மசேனா, போட்டி நடுவராக ரஞ்சன் மதுகலே நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
- ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.
- நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன்.
- கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக விளையாடினார். கடினமான துபாய் ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்ஸ் இல்லாமல் ஒரு ரன், இரண்டு ரன்களாக ஓடி ரன்கள் குவித்தார்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது குறித்து விராட் கோலி கூறியதாவது:-
நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன். கிரிக்கெட்டையும், பேட்டிங்கையும் விரும்புகிற வரை மற்ற அனைத்து விசயங்களையும் அதுவாகவே பார்த்துக்கொள்ளும்.
தலைக்குணிவை ஏற்படுத்தாத மோசமான நிலைக்கு தள்ளப்படாததற்கு கடவுளுக்கு நன்றி, அணிக்கு என்ன தேவையோ?. அதை நோக்கி உழைத்தால் இதுபோன்ற முடிவுகள் அடிக்கடி கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த நிலையில் இந்த போட்டிகளுக்காக தயாராக வேண்டும், உற்சாகம் பெற வேபண்டும், அதனுடன் களத்தில் இறங்க வேண்டும், அணிக்காக என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும், கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான்.
இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து வெளிப்படும்போது நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். அணி வெற்றிக்கான நிலையை தொடும்போது அது சிறந்த உணர்வாக இருக்கும்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.
- ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என பிசிசிஐ கட்டுப்பாடு விதிப்பு
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பயிற்சிக்கு செல்லும்போது அணியினர் செல்லும் பேருந்துகளில் தான் வீரர்கள் பயணம் சேயாய் வேண்டும் என்றும் பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என்று பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொது அங்கீகார அட்டையையே வீரர்கள் கொண்டு வர மறந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, போட்டி முடிந்த பின்பு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் இதனை முதல்முறை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படும் 2 ஆவது முறையாக மீறினால் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து வீர்ர கார்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.
இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.
முல்டர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 18 டெஸ்ட், 25 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மார்ச் 23-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.






