என் மலர்
விளையாட்டு
- இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும்.
ஹராரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதுகின்றன.
5 முறை சாம்பியனான இந்திய அணி லீக்கில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் அபிக்யான் குண்டு (199 ரன்), 'அதிரடி புயல்' வைபவ் சூர்யவன்ஷி (196), விஹான் மல்கோத்ரா (172), வேதாந்த் திரிவேதி சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்கம் தான் திருப்திகரமாக இல்லை. தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் ஒரு முறை கூட எடுக்கவில்லை. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல், அம்ப்ரிஷ் (தலா 11 விக்கெட்), ஹிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கும் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்தால் பேட்டிங் மேலும் வலுவடையும்.
ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பைசல் ஷினோஜதா (325 ரன்), உஸ்மான் சதத் (183), கேப்டன் மக்பூப் கானும் (178), பந்து வீச்சில் நூரிஸ்டானி ஓமர்ஜாய், அப்துல் அஜிசும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வலுவான இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சவாலை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு எளிதான விஷயமாக இருக்காது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
- வதோராவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக பெத் மூனி 62 ரன்கள் அடித்தார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
வதோராவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 62 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் சினெல்லே ஹென்றி 3 விக்கெட்டுகளும், நந்தினி ஷர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
169 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங் இறங்கியது. 15.4 ஓவர்கள் நின்று விளையாடிய டெல்லி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்ளும். இந்த சீசனின் லீக் போட்டிகளில் குஜராத் அணி டெல்லியை இரண்டு முறை வீழ்த்திய நிலையில் இன்று அதற்கு டெல்லி பழிவாங்கியது.
- இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூருவை சந்திக்கும்
- நடப்பு சீசனின் லீக் போட்டிகளில் குஜராத் அணி டெல்லியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. வதோராவில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் டெல்லி அணிக்கு வெற்றி இலக்காக 169 ரன்களை நிர்ணயித்துள்ளது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 62 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் சினெல்லே ஹென்றி 3 விக்கெட்டுகளும், நந்தினி ஷர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து டெல்லி பேட்டிங் செய்துவருகிறது. இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிப் பெறுகிறதோ அந்த அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்த சீசனின் லீக் போட்டிகளில் குஜராத் அணி டெல்லியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277 ரன்கள் சேர்த்தது.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் நிதேஷ் சாமுவேல் 47 ரன்கள் எடுத்தார். ஆர்யன் ஷர்மா 34 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஆலிவர் பீக் நிதானமாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்னால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.
இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார்.
4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
கொழும்பு:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தசன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசால் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்சனா, துஷ்மந்த சமீரா, மதீஷ பதிரன, ஈஷான் மலிங்கா.
இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 8-ம் தேதி அயர்லாந்துடனும், 12-ம் தேதி ஓமனுடனும், 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ம் தேதி ஜிம்பாப்வே உடனும் மோதுகிறது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.
- இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான கார்லோஸ் அல்காரஸ் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அடுத்த இரு வார காலத்துக்கு ஓய்வு தேவைப்படுவதால் ரோட்டர்டாம் ஓபன் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அல்காரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன்தான் என மோனங்க் படேல் கூறியுள்ளார்.
- அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
மும்பை:
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய 'ஏ' அணி, அமெரிக்காவுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய 'ஏ' அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் என்.ஜெகதீசன் 104 ரன்களும் (55 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ஆயுஷ் பதோனி 60 ரன்களும் (26 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.
பின்னர் ஆடிய அமெரிக்க அணி 19.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 'ஏ' அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் என அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது. இதில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.
இந்நிலையில் சிஎஸ்கே-வின் அடுத்த கட்ட நடவடிக்கை மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு அணி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல் 3 சீசன்கள் முறையே மகளிர் கோப்பையை மும்பை, ஆர்சிபி, மும்பை அணிகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்குகிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை? உலக கோப்பையை யார் வெல்வது எந்த அணி என கணித்து முன்னாள் வீரர்கள் பதிவிட ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து கணித்துள்ளார். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கணித்துள்ளார்.
- புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும்.
- பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.
துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்தியாவுடனான போட்டியை எதற்காக புறக்கணிக்கிறோம் என்ற காரணத்தை பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பி.சி.பி.யின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஐ.சி.சி. இன்னும் காத்திருக்கிறது.
பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும். பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் செல்வதற்கு தடை, வருவாய் பகிர்வு நிறுத்தம், பி.எஸ்.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுப்பு, அபராதம் என பல்வேறு வகையில் நடவடிக்கைகளை ஐ.சி.சி. எடுக்கும்.
இந்தியாவுடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
திட்டமிடப்பட்ட நாளில் (15-ந்தேதி) இந்திய அணி கொழும்பு மைதானத்துக்கு சென்று விடும். டாஸ் போடும் நிகழ்வில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக தகுதி நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை வழங்குவார்கள். பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை புறப்பட்டு சென்றது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
- இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.
அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.
ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை 'வெட்டு' விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.
ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.






