என் மலர்
விளையாட்டு
- ஒருவேளை மழை காரணமாக இன்று போட்டி நடைபெறவில்லையென்றால் நாளை (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும்.
- ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்
அகமதாபாத்:
18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஷி யுகி உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 11-22, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்..
மற்றொரு போட்டியில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் பர்கான் உடன் மோதினார். இதில் பர்கான் 21-17, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தினார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.
- இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.
இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
- 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.
அகமதாபாத்:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.
இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளும் இன்று மோதுவது 37-வது முறையாகும். இதுவரை நடந்த 36 ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியுடன் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன.
'குவாலிபையர்1' ஆட்டத்தில் பஞ்சாப்பை 101 ரன்னில் சுருட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் கர்னாண்டோ-பகாஸ் மவுலானா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள்.
- நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள் என விராட் கோலிக்கு ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கோலிக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள். நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன். கோப்பையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.
என டிவில்லியர்ஸ் கூறினார்.
- குவாலிஃபயர் 1 போட்டியின்போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது.
- எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சேவாக் கூறியதாவது:-
குவாலிஃபயர் 1 போட்டியின் போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது. எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. நான் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை ஆதரித்தாலும் அப்பொழுதும் தோல்விதான் மிஞ்சுகிறது. இப்போது ஆர்சிபியை ஆதரிக்கிறேன் என சிரித்தபடி கூறியுள்ளார்.
அவர் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதால் ஆர்சிபி அணியும் தோல்வியடைந்து விடும் என அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- இந்த போட்டியில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப்- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.
இதில் பிவி சிந்து முதல் செட்டை 22-20 என வென்றார். 2வது செட்டை நஜோமி 23-21 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பி.வி.சிந்து 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) எதிர் கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது. சின்னர் கால் இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜேக் டிராபரை (இங்கிலாந்து) 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்றில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) எதிர்கொண்டார். இதில் சுவரேவ் 6-4, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிக்ஸ்பூர் காயத்தால் விலகினார். இதனால் சுவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டது. ஜோகோவிச்-சுவரேவ் கால் இறுதியில் மோதுகிறார்கள்.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நாரியை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் காயம் காரணமாக குவாலிபையர் 1 போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இறுதிப்போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.






