என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஆர்சிபி கோப்பையை வெல்ல யாகம் நடத்திய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ
    X

    ஆர்சிபி கோப்பையை வெல்ல யாகம் நடத்திய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

    • ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இந்த போட்டியில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப்- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×