என் மலர்
விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென், பிரனாய் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஷி யுகி உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 11-22, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்..
மற்றொரு போட்டியில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் பர்கான் உடன் மோதினார். இதில் பர்கான் 21-17, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தினார்.
Next Story






