என் மலர்
விளையாட்டு
- மும்பை அணிக்கு எதிரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் ஸ்ரேயஸ் 8 சிக்சர்கள் அடித்தார்.
- நடப்பு ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும்.
இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர் வீராட்கோலி 614 ரன்னுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 603 ரன்னுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். இருவரும் சாய் சுதர்சனை நெருங்குவது மிகவும் கடினமானது. இதனால் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மும்பை அணிக்கு எதி ரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் அவர் 8 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் 39 சிக்சர்களுடன் 2-வது இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் உள்ள நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தால் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பார். பஞ்சாப் அணி தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 28 சிக்சர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பெங்களூரு அணி வீரர் ஹேசல்வுட் 21 விக்கெட் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் இடத்தை பிடிக்க இன்னும் 4 அல்லது 5 விக்கெட் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
- பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் வெற்றிபெற பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் ஸ்ரேயஸின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக குவாலிபையர் 2 போட்டியின் வெற்றியை தனது தாய் மற்றும் தங்கையுடன் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
- இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பில் சால்ட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பில் சால்ட் ஈடுபடவில்லை. ஆதலால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
குவாலியையார் 1 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்த பில் சால்ட் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றால் அது ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆர்.சி.பி. அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
- கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது.
- நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வாகை சூடி அமர்க்களப்படுத்திய பெங்களூரு அணியின் வெற்றி ரகசியம் என்னவெனில், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் ஜொலிக்கிறார்கள். அந்த அணியில் இதுவரை 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்று இருப்பதே அதற்கு சான்றாகும்.
அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த சீசனில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை 8 அரைசதங்களுடன் 614 ரன்கள் குவித்துள்ளார். பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட் (21 விக்கெட்), குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் பலம் சேர்க்கிறார்கள்.
பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியதுடன் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. மேலும் அந்த அணி இந்த சீசனில் 8-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது.
கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை தனது நேர்த்தியான திட்டமிடுதல் மற்றும் அணுகுமுறையால் பஞ்சாப் அணியை கோப்பையின் பக்கம் வரை அழைத்து சென்று விட்டார். அவர் இன்னும் ஒரு தடையை வெற்றிகரமாக கடந்தால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.
பஞ்சாப் அணியின் பிரதான பலமே இந்திய வீரர்கள் என்றால் மிகையாகாது. சர்வதேச போட்டியில் விளையாடாத 6 வீரர்களை (பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், விஜயகுமார் வைஷாக்) ஆடுல் லெவனில் கொண்டுள்ள அந்த அணி அவர்களின் அபாரமான ஆட்டத்தால் வீறுநடை போடுகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (39 சிக்சருடன் 603 ரன்), பிரப்சிம்ரன் சிங் (523), பிரியான்ஷ் ஆர்யா (451), நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ்சும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், விஜய்குமார் வைஷாக், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஹர்பிரீத் பிரார்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன் அல்லது டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
- இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும்.
அகமதாபாத்:
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
நாளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.
- பெண்களுக்கான 4-வது சுற்றில் மேடிசன் கீஸ், கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.
இதில் அலெக்சாண்டர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட் 3-0 என்ற செட் கணக்கில் இருக்கும் போது டாலன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அலெக்சாண்டர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளை போய்சன் வென்று பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு ஆட்டங்களில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கோகோ காப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
- செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
- நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
அப்போது, நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தருணம் குறித்து உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் டேபிலை தட்டியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
நானும் பலமுறை இதுபோல டேபிலை தட்டிய தருணங்களை கடந்து வந்துள்ளேன்.
ஆனால், மேக்னஸ் என்ன செய்கிறார் என நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. வெற்றி பெற்றதும் என்னை நானே நிதானப்படுத்த முயன்று கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
- எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியின் 6-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
என பிரதமர் மோடி கூறினார்.
- பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும்.
- பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
அதன்படி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம், குவஹாத்தியில் உள்ள ஏசிஏ ஸ்டேடியம், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியம் ஆகியவை ஆகும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணியின் தகுதிச் சுற்று நிலையைப் பொறுத்து, முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
- இந்த போட்டியில் சீனா 26 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இந்தியா 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்சென்னை குகேஷ் வீழ்த்தினார்.
- இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குகேஷ்-க்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.






