என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்- பிரதமர் மோடி வாழ்த்து
    X

    கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்- பிரதமர் மோடி வாழ்த்து

    • மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
    • எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியின் 6-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    என பிரதமர் மோடி கூறினார்.

    Next Story
    ×