என் மலர்
விளையாட்டு

ஆவேசமாக டேபிலை தட்டிய கார்ல்சன்- தனது ரியாக்ஷன் குறித்து குகேஷ் ஓபன் டாக்
- செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
- நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
அப்போது, நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தருணம் குறித்து உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் டேபிலை தட்டியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
நானும் பலமுறை இதுபோல டேபிலை தட்டிய தருணங்களை கடந்து வந்துள்ளேன்.
ஆனால், மேக்னஸ் என்ன செய்கிறார் என நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. வெற்றி பெற்றதும் என்னை நானே நிதானப்படுத்த முயன்று கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






