என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாக்னஸ் கார்ல்சன்"

    • செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
    • நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார்.

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    அப்போது, நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தருணம் குறித்து உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் டேபிலை தட்டியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    நானும் பலமுறை இதுபோல டேபிலை தட்டிய தருணங்களை கடந்து வந்துள்ளேன்.

    ஆனால், மேக்னஸ் என்ன செய்கிறார் என நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. வெற்றி பெற்றதும் என்னை நானே நிதானப்படுத்த முயன்று கொண்டிருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
    • போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    இந்த நிலையில் போலாந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • மாக்னஸ் கார்ல்சன் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.
    • சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் இன்று சென்னை வந்தார். அவர் நார்வே அணிக்காக போர்டு நம்பர்1-ல் விளையாடுவார்.

    சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். அப்போது அவருடன் பலர் செல்பி எடுத்தனர். ஆட்டோ கிராப்பும் வாங்கினர்.

    இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    ×