என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
    X

    மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

    • லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
    • இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும்.

    அகமதாபாத்:

    10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

    நாளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×