என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    வடக்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

    சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), சுபம் கஜுரியா, ஆயுஷ் பதோனி, யாஷ் துல், அங்கித் கல்சி, நிஷாந்த் சந்து, சாஹில் லோத்ரா, மயங்க் தாகர், யுத்வீர் சிங் சரக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, கன்ஹையா வாத்வான்

    • சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன.
    • ஆனால் அதனை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் நிராகரித்தார்.

    ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

    இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதனை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் நிராகரித்தார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அதன்படி சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் பின் தொடர்ந்து உள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
    • ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று சஞ்சு குடும்பத்தினர் கூறியுள்ளதாக தெரிகிறது.

    ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.

    ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ரஞ்சித் பர்தாகூரும் ஒருவர். இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் திட்டத்திலோ, மெகா ஏலத்திற்கு முன் ரிலீஸ் செய்யும் திட்டத்திலோ ராஜஸ்தான் அணி நிர்வாகம் இல்லை என்று அந்த அணி அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

    இதனால் வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் அல்லது ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கேட்டிருக்கிறார். அதேபோல் சஞ்சு சாம்சன் குடும்பத்தினரும், ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்க முயற்சி எடுக்கும் என தெரிகிறது.

    • ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 5 விக்கெட்டையும் ஜகரி ஃபௌல்க்ஸ் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சென்றது. இதில் முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 48.5 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டையும் ஜகரி ஃபௌல்க்ஸ் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

    • ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது.
    • ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடருக்காக இவரை தேர்வு செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது. இதில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

    ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், 604 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே நேரத்தில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிய ஏழு இன்னிங்ஸ்களில் 68.5 சராசரியுடன் 480 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார்.
    • கோலி ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்த தோனி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது விராட் கோலி குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி சிரித்தப்படி பதில் அளித்தார்.

    அதில், விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார், அதைவிட சிறப்பாக மிமிக்கிரி செய்வார். அவர் ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.

    என தோனி கூறினார். 

    • நவோமி ஒசாகா (ஜப்பான்) கிளாரா டாசனுடன் (டென்மார்க்) மோதினர்.
    • மற்றொரு ஆட்டத்தில் ரைபகினா (கஜகஸ்தான்) விக்டோரியா எம்போகோ (கனடா) ஆகியோர் மோதினர்.

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நவோமி ஒசாகா (ஜப்பான்) கிளாரா டாசனுடன் (டென்மார்க்) மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஒசாகா 6-2, 7-6 (9-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் ரைபகினா (கஜகஸ்தான்) விக்டோரியா எம்போகோ (கனடா) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரைபகினாவும் 2-வது செட்டை எம்போகோவும் கைப்பற்றினர். இறுதி செட்டை எம்போகோ கைப்பற்றினார். இதனால் எம்போகோ 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி

    • பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • முதல் செட்டை கரேன் கச்சனோவும் 2-வது செட்டை ஸ்வரேவும் கைப்பற்றினார்.

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பென் ஷெல்டன் (அமெரிக்கா) மற்றும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்யவை சேர்ந்த கரேன் கச்சனோவ் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை கரேன் கச்சனோவும் 2-வது செட்டை ஸ்வரேவும் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை கரேன் கைப்பற்றி அசத்தினார். இதனால் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கரேன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    சென்னை:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    • சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.
    • 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.

    சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
    • சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "எனக்கு தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் கல்லூரிக்கு ஃபீஸ் கட்டினேன்.

    சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமலும், கிழிந்த உடையுடனும் கல்லூரிக்கு சென்றேன். கடினமாக உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். உழைப்பு மட்டுமே உங்களை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

    சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் சாதிக்க முடியும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். கடந்து வந்த பாதையை மறக்க கூடாது.

    சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன், சிறியதாக வழிகாட்டினால் எதுவும் நடக்கலாம்" என்று தெரிவித்தார். 

    • கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.

    டொராண்டோ:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரெவெயிட்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ×