என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
    • இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

    அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் மத்திய மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளார் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார், கலீல் அகமது உள்ளிடோருக்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    மத்திய மண்டல அணி: துருவ் ஜூரல், ரஜத் படிதார், ஆர்யன் ஜூயல், டேனிஷ் மாலேவார், சஞ்சித் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்யா தாக்கரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, சுபம் ஷர்மா, யாஷ் ரத்தோர், ஹர்ஷ் துபே, மானவ் சூதர்.

    கூடுதல் வீரர்கள்: மாதவ் கௌசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், மற்றும் உபேந்திர யாதவ்.

    • ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
    • ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 21-ந் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். எங்கள் அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளது. இதனால் ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

    என மெக்ராத் கூறினார்.

    இங்கிலாந்து அணி கடைசியாக 2010-2011-ம் ஆண்டில் ஆஷஸ் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்.
    • 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர், பின்னர் பல அணிகளுக்காக விளையாடி, பின்னர் 2025-ல் மீண்டும் சிஎஸ்கே-வுக்கு திரும்பினார்.

    இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இருந்த தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வினும் வெளியேற உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் 212 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார்.
    • 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்றிருந்தார். அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாக சில தகவல்களை அவரது தந்தை கூறியுள்ளார்.

    அதில், அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவருக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை. அவரின் உழைப்பிற்கான பலன் அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என ஒட்டு மொத்த பயிற்சியாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என கவுதம் கம்பீர் என்னிடம் கூறினார்.

    • இறுதிப்போட்டியில் பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.
    • இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார்.

    டொராண்டோ:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர்களான பென் ஷெல்டன் (அமெரிக்கா), ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இரு செட்களில் ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-4, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    • ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஆசிய கோப்பை நடைபெற உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார். 4-வது டெஸ்ட் போட்டியில் காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. காயத்துடன் பேட்டிங் மட்டும் செய்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அவர் வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை தவறவிடுவார். மேலும் அக்டோபர் 2-ந்தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட்டின் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
    • மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது.

    பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    'ஏ' அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

    பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் 23-ந்தேதி மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த போலீசார் அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை ஜாமினில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர். 

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என நவோமி ஒசாகா கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட எம்போகா அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    லண்டன்:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.

    டொராண்டோ:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பரி- நீல் ஸ்கப்சி ஜோடி உடன் மோதியது.

    இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 6-7 (5-7), 13-11 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    • இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
    • இந்திய அணியினரின் சிறந்த பேட்டிங்கால் இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அவுட்டானார். காயம் காரணமாக 5-வது டெஸ்டில் இருந்து ரிஷப் விலகினார்.

    இதுபோல, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் இடது தோளில் காயமடைந்தார். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார்.

    ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன.

    இதற்கிடையே, ரிஷப் பண்ட் தனது சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், சல்யூட் என பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், உங்கள் அன்புக்கு நன்றி. எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி இறுதிப்போட்டியில் வென்றது.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-4 என கோகோ காப் ஜோடி வென்றது. ஆனால் 2வது செட்டை 6-1 கோகோ காப் ஜோடி என இழந்தது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி 3வது செட்டை 13-11 என போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றி அசத்தியது.

    ஒற்றையர் பிரிவில் கோகோ காப் தோல்வி அடைந்தாலும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×