என் மலர்
விளையாட்டு
இந்த போட்டியில் இங்கிலாந்து ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் கர்ரன் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்), ஜாப்ரா ஆர்ச்சர் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்), பென் ஸ்டோக்ஸ் (வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்) ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் இடம் பெறவில்லை. ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களால் மிகப்பெரிய அளவில் தாக்குதலை ஏற்படுத்த முடியவில்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட் நீண்ட காலமாக இணைந்து பந்து வீசி வருகின்றனர். காயம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து விளையாடாமல் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் முதன்முதலாக இருவரில் ஒருவர் வெளியில் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
யார்க்கர், ஸ்லோ பந்துகளை வீசும் பும்ராவால் டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் ஷார்ட் பிட்ச் பவுன்சர், வேகம் ஆகியவற்றால் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார்.
இதனால் டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில் முக்கிய இடத்தை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.
உலகமே இவரை தலைசிறந்த பந்து வீச்சாளர் என்பதை ஒத்துக்கொண்ட நிலையிலும், 2019 கற்றலுக்கான ஆண்டு. கற்ற அனைத்தையும் 2020-ல் வெளிக்காட்ட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘2019 சாதனைகள், கற்றல், கடின உழைப்பு மற்றும் நினைவுகளை உருவாக்குதலுக்கான ஆண்டு. அது மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மற்றும் எல்லா இடங்களிலும்... 2019-ம் ஆண்டின் கடைசி நாளில், இந்த வருடத்தின் அனைத்தையும் அடுத்த வருடமும் வெளிக்காட்ட காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த வருடத்தில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மேலும் 58 ஒருநாள் போட்டியில் 103 விக்கெட்டும், 42 டி20 போட்டியில் 51 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
முதுகு வலி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விளையாடாமல் இருக்கும் பும்ரா, அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் இலங்கை டி20 தொடரில் விளையாட இருக்கிறார்.
2019 has been a year of accomplishments, learning, hard work and making memories, on the field and off it too. And on the last day of the year, I’m looking forward to everything that 2020 has to offer! 💪🏼 pic.twitter.com/YishbcuYWO
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 31, 2019
உலக அளவிலான பெரிய போட்டிகளை (சர்வதேச கிரிக்கெட் தொடர்) அதிகமாக நடத்த ஐ.சி.சி. விரும்புகிறது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய செல்வாக்குமிக்க கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஐ.சி.சி. தொடர் அட்டவணையில் இடம் பிடித்தால், ஏற்கனவே ஒப்புக் கொண்ட இரு நாட்டு தொடர் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கூறி ஐ.சி.சி.யின் திட்டத்தை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதையடுத்து 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான வருங்கால போட்டி அட்டவணையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாளை 5-ல் இருந்து 4 ஆக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் கமிட்டி விரைவில் ஆலோசிக்க உள்ளது.
4 நாள் டெஸ்ட் போட்டி என்பது ஒன்றும் புதிய யோசனை கிடையாது. பரீட்சார்த்த முயற்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து இடையே 4 நாள் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதிய போட்டியும் 4 நாள் கொண்டதாக இருந்தது.
இவ்வாறு நடத்தப்படும் போது இந்த போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஐசிசி கருதுகிறது.
ஏற்கனவே பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஐசிசி-யின் இந்த முடிவு இருநாடுகளுக்கு இடையிலான தொடரை பாதிக்கும். மேலும், வருமானம் வெகுவாக குறையும் என்பதால், இதுகுறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஐசிசி-யின்பரிலீசனை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘முதலில் நாங்கள் ஐசிசி-யின் பரிந்துரையை முழுவதுமாக பார்க்க வேண்டும். முதலில் அது வரட்டும். அதன்பின் நாங்கள் அதை பார்க்க வேண்டும். தற்போது பதில் சொல்வது மிகவும் முன்கூட்டியே சொல்வதாகும். இதுகுறித்து தற்போது கருத்து கூற இயலாது’’ என்றார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதால் கடும் அதிருப்திக்குள்ளான இந்திய ஒலிம்பிக் சங்கம், 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது.
இதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்து சமாதானப்படுத்தினர். அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை புறக்கணிக்கும் திட்டத்தை கைவிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம் அந்த போட்டிக்கு இந்திய அணியை அனுப்பி வைப்பது என்றும் தீர்மானித்தது.
இந்த தகவலை தெரிவித்த ஐ.ஓ.ஏ. பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, காமன்வெல்த் விளையாட்டை நடத்த உரிமம் கோரும் முடிவுக்கு அனுமதி பெறுவதற்காக அடுத்து மத்திய அரசை அணுகுவோம் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் பிரிவை நீக்கியதால் அதை ஈடுகட்டும் வகையில் தனியாக காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பை நடத்த தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த ஐ.ஓ.ஏ, விரைவில் அதை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்துக்கு அனுப்பி வைக்கும்.
சென்னை:
இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசியபோது, ராஜஸ்தான் வீரர் ஜோஸ்பட்லர் (இங்கிலாந்து) கிரீசைவிட்டு வெளியே சென்றதால், அவரை மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு கை கொடுக்க ஜோஸ்பட்லர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் 2020-ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியிலும் யாராவது கிரீசைவிட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்வேன் என்று கூறியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அஸ்வின் பதில் அளித்தார். அப்போது வருகிற ஐ.பி.எல். போட்டியில் ‘மன் கட்’ முறையில் எந்த பேட்ஸ் மேனை ரன் அவுட் செய்வீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அஸ்வின் கூறும்போது, எந்த பேட்ஸ்மேனாவது நான் பந்து வீசும் போது கிரீசை விட்டு வெளியேறினால் ‘மன் கட்’ முறையில் ரன் அவுட் செய்வேன் என்று பதில் அளித்தார்.
வருகிற ஐ.பி.எல். போட்டியில் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடுகிறார்.
மெல்போர்னில் நடந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை துவம்சம் செய்தது. செஞ்சூரியனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இது தான் இந்த ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல் ஆகும்.
இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் அவர் மொத்தம் 274 நாட்கள் ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்தை அலங்கரித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். முன்னதாக சுமித் இந்த ஆண்டில் 91 நாட்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி 3-வது இடம் வகிக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பியதால் (9, 0) தரவரிசையில் 42 புள்ளிகளை பறிகொடுத்துள்ளார். இதே டெஸ்டில் 63, 19 ரன் வீதம் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் மேலும் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
ஆண்டின் தொடக்கத்தில் 110-வது இடத்தில் இருந்த லபுஸ்சேன் இந்த ஆண்டில் மட்டும் 3 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம் 1,104 ரன்கள் குவித்ததன் விளைவாக வியக்கத்தக்க ஏற்றம் கண்டிருக்கிறார். அவரது முன்னேற்றத்தால் 4-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 95, 34 ரன்கள் வீதம் எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 8 இடங்கள் உயர்ந்து டாப்-10 இடத்திற்குள் நுழைந்து, 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். ‘பாக்சிங் டே’ டெஸ்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய அவர் தரவரிசையில் 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று மறுபடியும் 900 புள்ளிகளை தாண்டியிருக்கிறார். 2019-ம் ஆண்டில் அவர் மொத்தம் 322 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் ஒரு இடம் அதிகரித்து 2-வது இடத்தை எட்டியுள்ளார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். செஞ்சூரியன் டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் வெரோன் பிலாண்டர் 8-ல் இருந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் (473 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (406 புள்ளி), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (377), தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (348), இந்தியாவின் அஸ்வின் (308) உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக பயணிக்கிறது. ஆஸ்திரேலியா 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான், இலங்கை தலா 80 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. நியூசிலாந்து 60 புள்ளியுடன் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 56 புள்ளியுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 30 புள்ளியுடன் 7-வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அதை முழுமையாக 4 நாள் கொண்ட போட்டியாக மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலிக்க முன்வந்துள்ளது.
உலக அளவிலான பெரிய போட்டிகளை அதிகமாக நடத்த ஐ.சி.சி. விரும்புகிறது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய செல்வாக்குமிக்க கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஐ.சி.சி. தொடர் அட்டவணையில் இடம் பிடித்தால், ஏற்கனவே ஒப்புக் கொண்ட இரு நாட்டு தொடர் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கூறி ஐ.சி.சி.யின் திட்டத்தை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதையடுத்து 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான வருங்கால போட்டி அட்டவணையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாளை 5-ல் இருந்து 4 ஆக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் கமிட்டி விரைவில் ஆலோசிக்க உள்ளது.

2015-2023-ம் ஆண்டு வரையிலான போட்டி அட்டவணையில் எல்லா டெஸ்டுகளும் 4 நாள் கொண்டதாக நடத்தப்பட்டு இருந்தால், ஐ.சி.சி.க்கு மொத்தம் 335 நாட்கள் கூடுதலாக கிடைத்திருக்கும். மேலும் 4 நாள் போட்டியில் தினமும் 90 ஓவர் என்பதற்கு பதிலாக 98 ஓவர்கள் வீசப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மொத்தத்தில் வெறும் 58 ஓவர்கள் தான் இழப்பு ஏற்படும். தற்போது பெரும்பாலான டெஸ்டுகள் 4 நாட்களுக்குள் முடிந்து விடுவதும் சுட்டிகாட்டப்படுகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், ‘4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம். அதற்கு முன்பாக கடந்த 5-10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகள் சராசரியாக எத்தனை நாட்கள் வரை நீடித்தது என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகும்.’ என்றார்.
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கும் போது, ‘ஆஷஸ் போட்டிகள் 4 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டால் முடிவு கிடைக்காமல் போகலாம். ஏனெனில் ஆஷஸ் தொடரில் ஒவ்வொரு டெஸ்டும் 5-வது நாளுக்கு நகர்ந்தது. மற்ற வடிவிலான போட்டியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசப்படுவதே 5 நாள் என்பதில் தான். இது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடினமானது. 4 நாள் முதல்தர போட்டியை விட 5 நாள் டெஸ்ட் தான் வீரர்களின் திறமையை வலுவாக சோதிக்கிறது. எனவே இது நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
ஒலிம்பிக் தகுதி சுற்றான ஆசிய-ஓசியானியா குத்துச்சண்டை போட்டி சீனாவின் வுஹான் நகரில் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய தகுதி போட்டி டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மேரிகோம் உள்ளிட்ட 5 பேர் இந்திய அணிக்கு தேர்வானர்கள்.
இந்த நிலையில் இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய முன்னணி வீரர் விகாஸ் கிருஷ்ணன், துர்யோதன் சிங் நெகியை வீழ்த்தி தனது இடத்தை உறுதி செய்தார். 26 வயதான விகாஸ் கிருஷ்ணன் ஒலிம்பிக்கில் 2 முறை பங்கேற்றவர் ஆவார். உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் கைப்பற்றி இருக்கிறார்.
இதே போல் காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்றவரான கவுரவ் சோலங்கி 57 கிலோ எடைப்பிரிவில் முகமது ஹூசாமுத்தினை தோற்கடித்து ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தேர்வானார்.
ஒலிம்பிக்கில் தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணி வருமாறு:- அமித் பன்ஹால் (52 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ), நமன் தன்வார் (91 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்).
தகுதி போட்டி மோதலை பார்வையிட்ட இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணியின் உயர் செயல்பாட்டு இயக்குனர் சான்டியாகோ நீவா கூறுகையில், ‘ஒவ்வொரு எடைப்பிரிவிலும் மிகவும் நெருக்கமாக கடும் போட்டி நிலவியது. இறுதிகட்ட அணியை பார்க்க வலுவாக தெரிகிறது. ஒலம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. அதற்குள் தேவையான சில விஷயங்களை சரி செய்து கடின பயிற்சி மேற்கொள்வோம்’ என்றார்.
இதற்கிடையே பெண்கள் தகுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், இளம் மங்கை நிகாத் ஜரீனை வீழ்த்தியதும், தன்னை ஏற்கனவே பலமுறை விமர்சித்ததால் ஆத்திரத்தில் அவரை வசைபாடியதோடு, கைகுலுக்கவும் மறுத்தார். இந்த சலசலப்பு குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜூஜூ நேற்று கருத்து தெரிவிக்கும் போது ‘குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் ஒரு ஜாம்பவான். அவர் அளவுக்கு உலக அமெச்சூர் குத்துச்சண்டையில் யாரும் சாதனை செய்ததில்லை. நிகாத் ஜரீன், மேரிகோமை போல திறமையை கொண்ட வியப்புக்குரிய வீராங்கனை. இருவரையும் நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதீத ஆர்வமும், உணர்ச்சிவசப்படுதலும் விளையாட்டின் உயிர்மூச்சு. ஒரு தொழில்முறை விளையாட்டில் அது மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதே சமயம் இந்தியாவின் சார்பில் விளையாடும் போது, மோசமான நடத்தையால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடாது.’ என்றார்.
இந்தியா எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விக்கெட் வீழ்த்தும் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் போன்றோர் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை. பனியின் காரணமாக பந்து ஈரப்பதம் அடையும். அப்போது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.
விக்கெட் வீழ்த்தும் ஆப்சனை நீங்கள் தேட வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆல்-ரவுண்டர்களை விட விக்கெட் வீழ்த்துவார் என்று நம்புகின்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இந்த விஷயத்தை அணி கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என நினைக்கிறேன். இதுதான் முக்கியமான அம்சம்.
ஆஸ்திரேலியா கண்டிசனில் யார் யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள். யார் யார் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் எதிரணி மீது நெருக்கடியை உண்டாக்க வேண்டும்’’ என்றார்.
2-வது ஆட்டத்தில் பலம் இல்லாத ரெயில்வேஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அடுத்த போட்டியில் வரும் 3-ந்தேதி வலிமையான கர்நாடகாவை எதிர்கொள்கிறது. ரெயில்வேஸ் அணிக்கெதிராக படுதோல்வி அடைந்ததால், கர்நாடகா அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட ரகானே, பிரித்வி ஷா சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ரகானே தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே இலங்கை தொடரில் விளையாட செல்வதால் அணியில் இடம் பெறவில்லை.
இந்த 10 ஆண்டுகளில் 897 போட்டிகளில் நடைபெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 578 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 293 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார். மேலும் தொடக்க பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். இவருடன் நியூசிலாந்தை சேர்ந்த கொலின் முன்றோவை மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் ரன் குவிக்கும் மெஷினாக திகழும் விராட் கோலிக்கு 3-வது இடத்தை கொடுத்துள்ளது. அதேபோல் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளரான பும்ராவுக்கும் இடம் கொடுத்துள்ளது.
விஸ்டன் அறிவித்துள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. கொலின் முன்றோ, 3. விராட் கோலி, 4. ஷான் வாட்சன், 5. மேக்ஸ்வெல், 6. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 7. முகமது நபி, 8. டேவிட் வில்லே, 9. ரஷித் கான், 10. பும்ரா, 11, லசித் மலிங்கா.
இரண்டு வெற்றிகள் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாது. வெற்றி அல்லது தோல்வி அந்த அணியை பெரிய அளவில் பாதிக்காது.
சிட்னி ஆடுகளம் ஏற்கனவே சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரான ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நாதன் லயன் அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.
இதனால் ஸ்வெப்சனுக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்நிலையில்தான் ஸ்வெப்சனுக்க வாய்ப்பு கிடைக்கும் வகையில் நாதன் லயன் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.
ஷேன் வார்னே விளையாடிய காலத்தில், சமகால சுழற்பந்து வீச்சாளரான மெக்கில்லுக்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்துக் கொண்டாரா? என நாதன் லயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘மெக்கில் விளையாடுவதற்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்ததுண்டா?. என்னால் ஒய்வில் இருக்க முடியாது. சிட்னி டெஸ்டில் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.’’ என்றார்.






