என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 உலக கோப்பையை வெல்ல ஆல்-ரவுண்டரை விட விக்கெட் வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை: அனில் கும்ப்ளே
Byமாலை மலர்30 Dec 2019 4:20 PM GMT (Updated: 30 Dec 2019 4:20 PM GMT)
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல ஆல்-ரவுண்டரை விட விக்கெட் வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தத் தொடருக்கான சிறந்த அணியை உருவாக்கத்தான் எல்லா அணிகளும் முயற்சி செய்யும்.
இந்தியா எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விக்கெட் வீழ்த்தும் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் போன்றோர் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை. பனியின் காரணமாக பந்து ஈரப்பதம் அடையும். அப்போது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.
விக்கெட் வீழ்த்தும் ஆப்சனை நீங்கள் தேட வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆல்-ரவுண்டர்களை விட விக்கெட் வீழ்த்துவார் என்று நம்புகின்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இந்த விஷயத்தை அணி கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என நினைக்கிறேன். இதுதான் முக்கியமான அம்சம்.
ஆஸ்திரேலியா கண்டிசனில் யார் யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள். யார் யார் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் எதிரணி மீது நெருக்கடியை உண்டாக்க வேண்டும்’’ என்றார்.

Next Story
×