என் மலர்
விளையாட்டு
இலங்கை தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் அங்குள்ள நான்கு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி வெளிநாட்டு வீரர்கள் விளையாட மறுத்து வந்தனர்.
இதனால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டு வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டின் பிற்பகுதி ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான போட்டிகள் பிப்ரவரி 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் 34 போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் 9 போட்டிகளும், லாகூர் கடாஃபி மைதானத்தில் 14 போட்டிகளும், முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 36 நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 22 நாடுகளில் இருந்து 425 வீரர்கள் 2020 தொடரில் விளையாட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியை ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்கும் ஐசிசி-யின் திட்டம் கேலிக்கூத்தானது என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலித்து வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், ‘‘ஐசிசி-யின் இந்த திட்டம் கேலிக்குரியது’’ என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசியின் பரிந்துரையை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் கருத்து கூற இயலும் என்று தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் பாலிவுட் ஜோடியான சாய்ஃப் அலி கான், கரீனா கபூர் உடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடினர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் அன்று பனிகளால் நிறைந்த மலைப்பகுதியில் நின்றபடி இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோவை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்போதுதான் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி சுவிட்சர்லாந்தில் உள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்றிரவில் இருந்து உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா சுவிட்சர்லாந்தில் உள்ள நிலையில், பாலிவுட் பிரபலங்களான சாய்ப் அலி கான், கரீனா கபூர், வருண் தவான், நட்டாஷா தலால் ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர். அனைவரும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர்.
அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படத்தை அனுஷ்கா ஷர்மா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காயத்தால் நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் டென்னிஸில் களம் இறங்குகிறார்.
ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் நேரடியாக விளையாட முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதை ஷரபோவா ஏற்றுக் கொண்டார்.
காயம் மற்றும் தொடர் தோல்விகளால் தரவரிசையில் 133-வது இடத்துக்கு தள்ளப்பட்ட 32 வயதான ஷரபோவா புத்தாண்டில் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்.
‘‘பிரிஸ்பேன் போட்டியை இதற்கு முன்பு பலமுறை தவற விட்ட நிலையில், தற்போது புத்தாண்டை இந்த போட்டியுடன் தொடங்குவது உத்வேகம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா கூறியுள்ளார்.

புதர் தீயால் நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், டெஸ்ட் போட்டியின்போது மழை பெய்யும் என்று நம்புகிறேன் என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளைமறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கிடையே நியூ சவுத் வேல்ஸில் காட்டுப்பகுதியில் உள்ள புதர்கள் எரிந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
200 வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், 15 பேர் இறந்துள்ளனர். தீயினால் உண்டான புகை சிட்னி நகரை ஆக்கிரமித்து அச்சுறுத்தி வருகிறது.
நாளைமறுநாள் சிட்னியில் நடைபெறும் ஆட்டமும் பாதிக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், ஆட்டத்தை விட சிட்னி நகர்தான் முக்கியம். அதனால் டெஸ்ட் போட்டியின்போது மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

கராச்சி போட்டியில் இலங்கையை 263 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், பாகிஸ்தானுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 கடினமான வருடம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சுமார் 10 வருடத்திற்குப்பின் இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி டிராவில் முடிந்தாலும், 2-வது போட்டியில் 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என்றாலும், பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 கடினமான வருடம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் அணி 2019-ம் ஆண்டை இலங்கை அணிக்கெதிரான மிகப்பெரிய வெற்றியோடு முடித்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு கடினமான வருடம்’’ என்றார்.

டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைத்து, அதிக அளவில் சர்வதேச தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ள ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பகல்-இரவு டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரசிகர்கள் திரண்டு வந்து டெஸ்டை ரசித்தனர்.
இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 தினங்களாக குறைக்க ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.
2023-ம் ஆண்டு தொடங்க உள்ள டெஸ்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 4 நாள் டெஸ்டை கட்டாய நடைமுறைக்கு கொண்டுவர ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பல நாட்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த நாட்களில் கூடுதலாக சர்வதேச தொடர்களை நடத்தி வருமானம் ஈட்டலாம் என ஐசிசி நினைக்கிறது.
4 நாள் டெஸ்ட் கட்டாய மாக்கப்படும் பட்சத்தில் 2 நாட்கள் விதிமுறையில் மாற்றம் செய்யப்படும். தற்போது 5 நாள் டெஸ்டில் நாள் ஒன்றுக்கு அதை வைத்து வேறு போட்டிக்களை நடத்தி கொள்ளலாம் என்பது ஐ.சி.சி. யின் வருங்கால திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.
மேலும் ஓவர்களின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக டெஸ்டில் நாள் ஒன்றுக்கு 90 ஓவர் வீசப்படும். இது 98 ஓவர் களாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்களை மட்டுமே இழக்க முடியும். கூடுதல் ஓவர்களை வீசுவதன் மூலம் டெஸ்ட் முடிவில் பாதிப்பு ஏற்பாடாது என்று கூறப் படுகிறது.
இந்தநிலையில் ஐசிசி-யின் இந்த முடிவை ஆதரிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்து ஐசிசி-யின் பரிந்துரைக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை சவால் செய்யும் வகையிலான இந்த முடிவை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
4 நாள் டெஸ்ட்தான் நிலையான தீர்வை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். போட்டிக்கான திட்டமிடல், வீரர்களின் பணிச்சுமை குறை போன்ற தீர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே ஐசிசி-யுடன் இந்த 4 நாள் டெஸ்ட் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பரம்பரை எதிரிகளான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இதற்கு ஆதரவாக உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும்போது, ‘‘ முதலில் இந்த திட்டம் வரட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று 4 நாள் டெஸ்ட் குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது சரியானது இல்லை’’ என்றார்.
டி.ஆர்.எஸ். மற்றும் பகல்- இரவு டெஸ்டுக்கு இந்தியா தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் ஏற்றுக் கொண்டது. அதேநிலை இதிலும் பின்பற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இன்று 2020-ம் ஆண்டு உற்சாகமாக பிறந்துள்ளது. அதற்கு முன்பாக கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது யார்? சறுக்கியது யார்? அணிகளின் வெற்றி-தோல்வி எப்படி? உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
புதுடெல்லி:
2019-ம் ஆண்டில் மொத்தம் 39 டெஸ்டுகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தலா 12 டெஸ்டுகளில் விளையாடி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், 2-ல் டிராவும் சந்தித்தது. இங்கிலாந்து 4-ல் மட்டுமே வெற்றி (எஞ்சிய 6-ல் தோல்வி, 2-ல் டிரா) பெற்றது. 2019-ம் ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும் தான். 8 டெஸ்டுகளில் பங்கேற்று 7-ல் வெற்றி பெற்றது. இதில் 4 இன்னிங்ஸ் வெற்றிகளும் அடங்கும். மற்றொரு போட்டி டிரா ஆனது. வங்காளதேசம் (5 டெஸ்ட்), அயர்லாந்து (2 டெஸ்ட் ) அனைத்திலும் தோல்வியை தழுவிய அணிகள் ஆகும்.
ஹாமில்டனில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 715 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 100 ரன்னுக்குள் அடங்கிய நிகழ்வு 4 முறை நடந்தது. இதில் அயர்லாந்து அணி லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 38 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தை பிடித்தார். அவர் 11 டெஸ்டில் 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,104 ரன்கள் (சராசரி 64.94) சேர்த்துள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 8 டெஸ்டில் ஆடி 3 சதம் உள்பட 754 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 72 சதங்கள் பதிவாகியுள்ளன. அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் (335* ரன்) நொறுக்கியது தனிநபர் அதிகபட்சமாகும்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ‘நம்பர் ஒன்’ இடத்தை ஆக்கிரமித்துள்ள ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 12 டெஸ்டுகளில் 59 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். முகமது ஷமி, ஹேசில்வுட், காஜிசோ ரபடா, டிம் சவுதி ஆகியோர் ஒரே மாதிரி 8 டெஸ்டுகளில் தலா 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ஆச்சரியமான ஒற்றுமையாகும். வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ், இங்கிலாந்துக்கு எதிராக 60 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை அள்ளியது இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும்.
ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் மொத்தம் 150 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதிகபட்சமாக இந்தியா 28 ஆட்டங்களில் விளையாடி 19-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்த ஆண்டில் ஒரே ஒரு ஆட்டம் சமனில் (டை) முடிந்துள்ளது. அது இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டமாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் (தலா 15-ல் தோல்வி) அதிக சறுக்கலை சந்தித்த அணிகளாகும்.
செயின்ட் ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்தது ‘மெகா’ ஸ்கோராகும். இந்த ஆண்டில் 400 ரன்களை கடந்த ஒரே அணி இங்கிலாந்து தான். நமிபியாவுக்கு எதிராக ஓமன் அணி 81 ரன்னில் அடங்கியது குறைந்தபட்சமாகும். இந்திய வீரர் ரோகித் சர்மா 36 சிக்சர், 146 பவுண்டரி என்று 1,490 ரன்களுடன் அதிக ரன்கள் குவிப்பில் முதலிடம் வகிக்கிறார். 99 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. ரோகித் சர்மா அதிகபட்சமாக 7 சதங்களும், இந்திய கேப்டன் விராட் கோலி 5 சதங்களும் அடித்திருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல் அயர்லாந்துக்கு எதிராக 179 ரன்கள் எடுத்தது தனிநபர் உயர்ந்த ஸ்கோராகும்.
விக்கெட் வீழ்த்தியதில் முதல்வனாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திகழ்கிறார். அவர் 21 ஆட்டங்களில் 42 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தது தனிநபர் சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் ஆச்சரியங்களும், அதிசயங்களும் அதிகமாக நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் நடந்துள்ள 20 ஓவர் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 307. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகமான 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. அதற்கு காரணம், கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த பல குட்டி அணிகள் மோதிய ஆட்டங்களுக்கும் சர்வதேச அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியிருந்தது. மொத்தம் 71 அணிகள் இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் கால்பதித்தன. இதில் அர்ஜென்டினா, பக்ரைன், பெல்ஜியம், பிரேசில், செக்குடியரசு, டென்மார்க், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், சிங்கப்பூர், துருக்கி, உகாண்டா போன்ற அணிகளும் அடங்கும்.
கடந்த ஆகஸ்டு மாதம் ருமேனியா தலைநகர் புச்சாரெஸ்ட் வடகிழக்கே மோரா விளசியா என்ற கிராமத்தில் நடந்த துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் செக்குடியரசு 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்து, முந்தைய உலக சாதனையை (ஏற்கனவே ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது) சமன் செய்தது. கட்டாந்தரை மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தை நேரில் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு டஜன் கூட கிடையாது. ஏன் செக்குடியரசு வீரர்களுக்கு கூட களத்தில் நின்றது வரை இது உலக சாதனை என்று தெரியாது.
இதே ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் 37 வயதான சுதேஷ் விக்ரமசேகரா 35 பந்துகளில் சதம் விளாசி, அதிவேக சதம் கண்டவர்களான இந்தியாவின் ரோகித் சர்மா, தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் (இவர்களும் 35 பந்தில் சதம் அடித்திருந்தனர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். துருக்கியை வெறும் 21 ரன்னில் சுருட்டி 257 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்ததும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. துருக்கி அணி 21 ரன்னில் சுருண்டது தான், 20 ஓவர் கிரிக்கெட்டில் மொத்தத்தில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோராகும்.
19 வீரர்கள் சதம் அடித்தனர். ஆனால் இந்த பட்டியலில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அயர்லாந்துக்கு எதிராக 162 ரன்கள் விரட்டியது தனிநபர் அதிகபட்சமாகும். அதிக ரன்கள் எடுத்ததில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்கும் (748 ரன், 20 ஆட்டம்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சன்னேவும் (16 ஆட்டத்தில் 28 விக்கெட்) முதலிடம் பிடித்தனர்.

‘சாதனையின் சிகரம்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய கேப்டன் இந்த ஆண்டில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் முதலிடத்தை பெறாமல் இருக்கலாம். ஆனால் மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து 2019-ல் அதிக ரன்கள் குவித்தவர் இவர் தான். டெஸ்டில் 612 ரன், ஒரு நாள் போட்டியில் 1,377 ரன், 20 ஓவர் போட்டியில் 466 ரன்கள் என மொத்தம் 7 சதம் உள்பட 2,455 ரன்கள் குவித்து ‘நம்பர் ஒன்’ நானே என தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருக்கிறார்.

சிக்சர் மன்னர்களாக டெஸ்டில் ரோகித் சர்மாவும் (20 சிக்சர்), ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லும் (56 சிக்சர்), 20 ஓவர் போட்டியில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையனும் (36 சிக்சர்) வலம் வருகிறார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (5) டெஸ்டிலும், ஆப்கானிஸ்தானின் முஜீப் ரகுமான், ரஷித்கான் (தலா 4) ஆகியோர் ஒரு நாள் போட்டியிலும் அதிக டக்-அவுட் ஆனவர்கள் ஆவார்கள்.

‘சாதனையின் சிகரம்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய கேப்டன் இந்த ஆண்டில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் முதலிடத்தை பெறாமல் இருக்கலாம். ஆனால் மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து 2019-ல் அதிக ரன்கள் குவித்தவர் இவர் தான். டெஸ்டில் 612 ரன், ஒரு நாள் போட்டியில் 1,377 ரன், 20 ஓவர் போட்டியில் 466 ரன்கள் என மொத்தம் 7 சதம் உள்பட 2,455 ரன்கள் குவித்து ‘நம்பர் ஒன்’ நானே என தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருக்கிறார்.
பிக் பாஷ் டி20 லீக்கில் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து, மோசமான நிகழ்வுடன் 2019-ஐ நிறைவு செய்துள்ளார் ரஷித் கான்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். அவர் உலக அளவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஜாம்பவானாக திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடி வருகிறார்.
இவர் இடம் பிடித்திருக்கும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது. முதலில் சிட்னி தண்டர் அணி பேட்டிங் செய்து 168 ரன்கள் குவித்தது. சிட்னி தண்டர் அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
ரஷித் கான் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுவரை பிக் பாஷ் டி20 லீக்கில் இவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுத்தது இல்லை. 2019-ம் ஆண்டு முடிவு அவருக்கு மோசமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி தலைசிறந்த கேப்டன் என சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அனில் கும்ப்ளே தனது ஒரு வருட தலைமை பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க விரும்பவில்லை.
உரசல் இருந்ததாக தகவல் வெளியான நிலையில் கூட, விராட் கோலியின் தலைசிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கேப்டன்ஷிப் குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலியை ஐந்து வருடங்களாக கேப்டன் பதவியில் நாம் பார்த்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துள்ளார்.
அணியில் தொடர்ச்சியாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அணி எப்போதெல்லாம் திணறியதோ, அப்போதெல்லாம் தனி வீரராக நின்று அணியை நிமிர்த்தியுள்ளார்.
தற்போது அவர் கேப்டனாக இருந்தபோதிலும். இங்கிலாந்து உலகக்கோப்பை அவருக்கு முதல் உலகக்கோப்பை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவரது தலைமை மிகவும் சிறப்பானதாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை பார்த்தீர்கள் என்றால், இக்கட்டான நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் பேட்டிங், பந்து வீச்சு என இந்தியா மிகவும் வசதியான நிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டியில் அவர் வசதியான கேப்டன். ஏனென்றால், யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். இதேபோன்று டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தேடிப்பிடிப்பது அவசியம்’’ என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் பேட்டின்சன், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் பட்டின்சன். 29 வயதாகும் இவர் கடந்த 2011-ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21 வயதில் களம் இறங்கிய பட்டின்சன், அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட் (முதல் இன்னிங்சில் 1, 2-வது இன்னிங்சில் 5) வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலி பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். ஆகவே, இவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
பறவைகள் சீசனுக்கு வந்து செல்வது போன்று அவ்வப்போது கிரிக்கெட்டில் தென்படுவார். இதனால் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் விளையாடிய பட்டின்சன் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்தார். மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
அடுத்த வருடம் கோடைக்காலத்தில் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. கடந்த முறை இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அப்போது ஆஸ்திரேலியா முழு வலிமையான அணியாக இல்லை.
தற்போது ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் வலிமையான அணியாக திகழ்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை வென்றுள்ளது.
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தொடர் இந்தியாவுக்கு எளிதானதாக இருக்காது. தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஜேம்ஸ் பேட்டின்சன் கூறுகையில் ‘‘எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்காக முழு திறமையையும் வலுப்படுத்திக் கொள்ள எனது உடல் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.
எனது இலக்கை அடைவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். தற்போது எனக்கு 29 வயதுதான் ஆகிறது. எனக்கு போதுமான அளவுக்கு நேரம் இருக்கிறது. அடுத்த வருடம் இதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் பேட்டின்சன் கூறுகையில் ‘‘எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்காக முழு திறமையையும் வலுப்படுத்திக் கொள்ள எனது உடல் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.
எனது இலக்கை அடைவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். தற்போது எனக்கு 29 வயதுதான் ஆகிறது. எனக்கு போதுமான அளவுக்கு நேரம் இருக்கிறது. அடுத்த வருடம் இதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.
மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29-ந்தேதி ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் என முக்கிய நபர் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது. இந்த 10 ஆண்டுகளின் கடைசி தொடரான 2019-ல் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல் மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31-ந்தேதிதான் முடிவடைகிறது.
முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.