search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி
    X
    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி

    டெஸ்ட் போட்டி நான்கு நாட்களாக குறைப்பு: ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு

    டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைத்து, அதிக அளவில் சர்வதேச தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ள ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
    20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பகல்-இரவு டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரசிகர்கள் திரண்டு வந்து டெஸ்டை ரசித்தனர்.

    இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 தினங்களாக குறைக்க ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.

    2023-ம் ஆண்டு தொடங்க உள்ள டெஸ்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 4 நாள் டெஸ்டை கட்டாய நடைமுறைக்கு கொண்டுவர ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பல நாட்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த நாட்களில் கூடுதலாக சர்வதேச தொடர்களை நடத்தி வருமானம் ஈட்டலாம் என ஐசிசி நினைக்கிறது.

    4 நாள் டெஸ்ட் கட்டாய மாக்கப்படும் பட்சத்தில் 2 நாட்கள் விதிமுறையில் மாற்றம் செய்யப்படும். தற்போது 5 நாள் டெஸ்டில் நாள் ஒன்றுக்கு அதை வைத்து வேறு போட்டிக்களை நடத்தி கொள்ளலாம் என்பது ஐ.சி.சி. யின் வருங்கால திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

    மேலும் ஓவர்களின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக டெஸ்டில் நாள் ஒன்றுக்கு 90 ஓவர் வீசப்படும். இது 98 ஓவர் களாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்களை மட்டுமே இழக்க முடியும். கூடுதல் ஓவர்களை வீசுவதன் மூலம் டெஸ்ட் முடிவில் பாதிப்பு ஏற்பாடாது என்று கூறப் படுகிறது.

    இந்தநிலையில் ஐசிசி-யின் இந்த முடிவை ஆதரிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்து ஐசிசி-யின் பரிந்துரைக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை சவால் செய்யும் வகையிலான இந்த முடிவை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

    4 நாள் டெஸ்ட்தான் நிலையான தீர்வை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். போட்டிக்கான திட்டமிடல், வீரர்களின் பணிச்சுமை குறை போன்ற தீர்வை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆஸ்திரேலியா ஏற்கனவே ஐசிசி-யுடன் இந்த 4 நாள் டெஸ்ட் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பரம்பரை எதிரிகளான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இதற்கு ஆதரவாக உள்ளன.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும்போது, ‘‘ முதலில் இந்த திட்டம் வரட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று 4 நாள் டெஸ்ட் குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது சரியானது இல்லை’’ என்றார்.

    டி.ஆர்.எஸ். மற்றும் பகல்- இரவு டெஸ்டுக்கு இந்தியா தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் ஏற்றுக் கொண்டது. அதேநிலை இதிலும் பின்பற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
    Next Story
    ×