search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் சூப்பர் லீக்"

    • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

    முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    முல்தான் சுல்தான்  அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

    போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.

    • முதலில் ஆடிய லாகூர் அணி 200 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய முல்தான் அணி 199 ரன்கள் எடுத்து தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது.

    இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.

    • டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் உடனடியாக சரி செய்யப்பட்டது.
    • மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பிஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்த தொடரின் 2023-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

    பாகிஸ்தானிலுள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மைதானத்தில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம், சலசலப்புக்கு பின்னர் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்கள் இடையிலான போட்டி 30 நிமிடம் காலதாமதமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் வெடி ஒன்று மின் விளக்கு மீது மோதி வெடித்தது. இதன் மூலம் ஏற்பட்ட தீபொறி மின் விளக்கில் பற்றி எரிந்துள்ளது. பின்னர் உடனடியாக மின்விளக்குகள் ஒளிருவது நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.


    இதைத்தொடர்ந்து மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, போட்டி காலதாமதமாக தொடங்கப்பட்டது. மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின.
    • 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி இன்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

    குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது, பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில், யுவராஜி சிங் பாணியில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவர் சிக்சர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தின் டான் வான் பங்கேவின் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசினார். அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார்.

    இதேபோல், முதல் தர கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆவார். அவர் 1984-85 ரஞ்சிக் கோப்பை தொடரில் பரோடாவுக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    ஐந்தாண்டுகள் தடைபெற்ற சல்மான் பட் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். #PSL
    பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சல்மான் பட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

    தடைக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வந்தார்.

    தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் முகமது ஹபீஸ் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சல்மான் பட்டை அணி தேர்வு செய்துள்ளது.

    இதனால் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார். மிகப்பெரிய தொடருக்கு திரும்பியது குறித்து சல்மான் பட் கூறுகையில் ‘‘என்னால் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

    அவருடன் தண்டனை பெற்ற முகமது அமிர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புல்வாமாவில் பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததையொட்டி பிஎஸ்எல் ஒளிபரப்பை நிறுத்தியது டிஸ்போர்ட் #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

    அதேத்தினத்தன்று ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆங்காங்கே அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் விளையாடாத நிலையிலும், டிஸ்போர்ட் இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கி கடந்த வருடத்தில் இருந்து இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக டிஸ்போர்ட் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது. 
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட இருக்கும் டி வில்லியர்ஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். #PSL #DeVilliers
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.

    தற்போது பெரும்பாலான ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ் ஐஎஸ்எல் தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்தார். ஆனால் முதலில் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள டி வில்லியர்ஸ், ‘‘மார்ச் 9 மற்றும் 10-ந்தேதி கடாபி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    ×