search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜஸ்டின் லாங்கர், ஆஸ்திரேலியாவில் தீப்பற்றி எரியும் புதர்கள்
    X
    ஜஸ்டின் லாங்கர், ஆஸ்திரேலியாவில் தீப்பற்றி எரியும் புதர்கள்

    கிரிக்கெட் இரண்டாம் பட்சம்தான்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சொல்கிறார்

    புதர் தீயால் நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், டெஸ்ட் போட்டியின்போது மழை பெய்யும் என்று நம்புகிறேன் என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

    3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளைமறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கிடையே நியூ சவுத் வேல்ஸில் காட்டுப்பகுதியில் உள்ள புதர்கள் எரிந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    200 வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், 15 பேர் இறந்துள்ளனர். தீயினால் உண்டான புகை சிட்னி நகரை ஆக்கிரமித்து அச்சுறுத்தி வருகிறது.

    நாளைமறுநாள் சிட்னியில் நடைபெறும் ஆட்டமும் பாதிக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், ஆட்டத்தை விட சிட்னி நகர்தான் முக்கியம். அதனால் டெஸ்ட் போட்டியின்போது மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×